ரஷியா டியு-154 ராணுவ விமானம் கருங்கடலில் சிக்கியது

ரஷியாவின் சோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் 91 பேருடன் மாயமானது. இதனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கும் என அஞ்சப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய படையினர் ஈடுபட்டனர். தற்போது நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் விழுந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Dec 25, 2016, 12:48 PM IST
ரஷியா டியு-154 ராணுவ விமானம் கருங்கடலில் சிக்கியது

மாஸ்கோ: ரஷியாவின் சோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் 91 பேருடன் மாயமானது. இதனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கும் என அஞ்சப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய படையினர் ஈடுபட்டனர். தற்போது நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் விழுந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்து உள்ளது.

சோச்சியிலிருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் சிறிது நேரத்தில் ரேடார் திரையில் இருந்து விலகியது என முதல்கட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. இதில் 83 பயணிகள் மற்றும் 8 குழு உறுப்பினர்கள் என நாட்டின் அவசரகால அமைச்சக தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

சோச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் கருங்கடல் பகுதியில் ரஷிய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. 

விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்ட பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து ரேடாரில் இருந்து விலகிஉள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 5:20 மணியளவில் புறப்பட்ட விமானம் 5:40 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து உள்ளது என்று  தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே விமானத்தை தேடும் பணியானது தொடங்கியது என உள்ளூர் செய்தியாளர்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.

More Stories

Trending News