ரஷியாவின் அதிபர் தேர்தல் மார்ச் 18-ம் தேதி!!

ரஷியா நாட்டின் அதிபர் தேர்தல் வருகின்ற ஆண்டு மார்ச் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

Last Updated : Dec 15, 2017, 06:04 PM IST
ரஷியாவின் அதிபர் தேர்தல் மார்ச் 18-ம் தேதி!!

ரஷியா நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. 

இதையடுத்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இத்தேர்தலில் தற்போதைய அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி ரஷியா அதிபர் தேர்தலை நடத்த பாராளுமன்ற மேல்சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 

இதையடுத்து அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷியா பாராளுமன்ற சபாநாயகர் வாலெண்டினா மேட்வெய்ன்கோ அறிவித்துள்ளார்.

More Stories

Trending News