நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா தற்போது தனது கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சீனாவில் நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.
2-வது நாளான நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பயங்கரவாத குழுக்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். மேலும் பயங்கரவாதம் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இந்த அமைப்பு(‘பிரிக்ஸ்’ ) முடிவு செய்துள்ளன என பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் வழியனுப்பி வைக்க, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதலாவதாக பிரதமர் ஜெர்மனிக்கு செல்கிறார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு நாளை ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு 31-ம் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு 18_வது இந்தியா, ரஷியா உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
15 மாதத் தடைக்குப் பிறகு களமிறங்குகிறார் மரியா! முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.
முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்பவர் ரஷியாவாவை சேர்ந்த மரியா ஷரபோவா. 30 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். கடந்த 2016-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தடை நீங்கியுள்ளது.
ரஷியாவின் சோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் 91 பேருடன் மாயமானது. இதனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கும் என அஞ்சப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய படையினர் ஈடுபட்டனர். தற்போது நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் விழுந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினரின் இணையதளங்களில் சட்டவிரோதமாக நுழைந்து, எப்படியெல்லாம் தகவல்களை திருடி, கசிய விட வேண்டும் என்று புதின் தனிப்பட்ட முறையில் சிலருக்கு அறிவுரைகள் வழங்கியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இது தொடர்பான தகவல்களை ‘என்.பி.சி. நியூஸ்’ வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ரஷியா மற்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்தனர்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. அந்த மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் கூடங்குளம் புதிய அணுஉலை, அரியானா மற்றும் ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி, சைபர் பாதுகாப்பு, அறிவியல்-தொழில்நுட்பம் ஒப்பந்தம், போர் தளவாடங்கள் கொள்முதல், அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணை உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்திக்கின்றன. இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும்
அதிநவீன எஸ்-400 ட்ரையும்ப் ஏவுகணையை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து இருந்தது. 5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா - ரஷியா இடையே கையெழுத்து ஆக உள்ளது எனத்தெரிகிறது..
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் முண்ணனியில் கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர், ரஷ்யாவுடன் இணைந்து மேலும் பல அணு உலைகளை கூடங்குளத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.