ஐஃபோன் டிஸைன்களின் நகல்களை காப்பி அடித்த வழக்கில், ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்ஸங் 37,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐஃபோன் தயாரிப்புகளில் உள்ள சில சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் காப்பி அடிப்பதாகக் கூறி, கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியின் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து, அவர்கள் அறிவித்த தீர்ப்பில் ஐஃபோனின் முக்கிய சிறப்பம்சங்கள் சாம்ஸங் ஸ்மார்ட்ஃபோன்களில் காணப்படுவதாகவும், இந்த தொழில்நுட்பக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், பொருட்கள் தயாரிப்பிற்கான சர்வதேச விதிகளை மீறிய சாம்ஸங், ஆப்பிளிற்கு 37,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு புத்தாக்க சிந்தனைகளோடு புதுமைகளை படைத்து வருவதாகவும், பணத்தை விட ஊழியர்களின் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது 3 ஐஃபோன் டிஸைன்களை சாம்ஸங் காப்பி அடித்தது எவராலும் மறுக்க முடியாத உண்மை என்றும், இது இரண்டு காப்புரிமை விதிகளை மீறிய செயல் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்பை சாம்ஸங் நிறுவனம் விமர்சித்துள்ளதோடு, நஷ்ட ஈட்டை முழுமையாக கொடுப்பதில் தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது!