சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமான காந்த நட்சத்திரம்! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2023, 02:26 PM IST
  • பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவா.
  • இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர்நோவாக்களில் இதுவே மிகத் தொலைவில் உள்ளது.
  • பிரகாசத்திற்கு காரணம் அதன் வலுவான காந்தப்புலம் தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சூரியனை விட 57,000 கோடி மடங்கு பிரகாசமான காந்த நட்சத்திரம்! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்! title=

விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு மர்மமான பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனை விட பல மில்லியன் மடங்கு பிரகாசமாக காணப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒரு வகை சூப்பர்நோவாவின் பிரகாசம் சூரியனை விட 57 ஆயிரம் கோடி மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அது வெகு தொலைவில் காரணமாக அது நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் மிகவும் வலிமையானது, அது எதையும் எரித்து சாம்பலாக்கும்.

விஞ்ஞானிகள் இதை சூடான வாயுக்களின் பந்து என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது என்னவென்று ஒரு தெளிவான தகவலை பெற மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் இதை ஒரு சூப்பர்நோவா என்று அழைக்கிறார்கள், மற்றவர்கள் அதை வேறு விதமாக அழைக்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலான விண்வெளி விஞ்ஞானிகள் இதை ஒரு வகை சூப்பர்நோவா என்று கூறுகின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் நோவாக்களில் இதுவே மிகத் தொலைவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மிக மிக வேகமானது என்று கூறப்படுகிறது.

இந்த வாயுக் கோளம் முதன்முதலில் சூப்பர்நோவாவின் ஸ்கை ஆட்டோமேட்டட் சர்வே (ASAS-SN, டெலஸ்கோப்களின் நெட்வொர்க்) மூலம் பார்க்கப்பட்டது. இதுவரை இந்த நெட்வொர்க் 250க்கும் மேற்பட்ட சூப்பர்நோவாக்களை கண்டுபிடித்துள்ளது. இந்த நெட்வொர்க்கின் வேலையே விண்வெளியில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை தேடுவதுதான்.

மேலும் படிக்க | பூமியை தாக்க வரும் செயற்கைகோள்... உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

ASAS-SN கருவியினால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய சூப்பர்நோவா இதுவாகும். இது ஒரு சாதாரண சூப்பர்நோவாவை விட 200 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டது. விண்வெளியில் இருக்கும் அனைத்து நட்சத்திரங்களையும் சேகரித்தாலும், அது ஒரு சூப்பர்நோவா அளவை விட பெரியதாக இருக்காது.

அதன் பிரகாசத்திற்கு காரணம் அதன் வலுவான காந்தப்புலம் தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது கன சதுர நட்சத்திரங்களின் குழு என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதன் காந்தப்புலம் மிகவும் வலுவானதாக நம்பப்படுகிறது. எனவே இது மிக வேகமாக சுழலுகிறது. அதனால் அது மிக பிரகாசமாக் தெரிகிறது என்கின்றனர் விஞ்னானிகள். தற்போது விஞ்ஞானிகள் இந்த புரியாத புதிரை மேலும் புரிந்து கொள்ள மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்... விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News