கருமுட்டை வங்கியில் கருமுட்டைகளை பாதுகாக்கும் எண்ணிக்கை அதிரடியாக உயர்வு! காரணம் என்ன?

Egg And Embryo Freezing: கருமுட்டையை பாதுகாக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் உயர்வுக்கும் கோவிட் மற்றும் கொரோனாவுக்கும் தொடர்பு உள்ளதா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2023, 07:15 AM IST
  • கருமுட்டையை பாதுகாக்கும் பெண்களின் எண்ணிக்கையில் உயர்வு
  • கோவிட் மற்றும் கொரோனாவின் மற்றுமொரு பின் விளைவு
  • கருமுட்டை உறைதல் தொழில்நுட்பம்
கருமுட்டை வங்கியில் கருமுட்டைகளை பாதுகாக்கும் எண்ணிக்கை அதிரடியாக உயர்வு! காரணம் என்ன? title=

கருமுட்டைகளை உறைய வைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ‘வியத்தகு உயர்வு’ ஏற்பட்டுள்ளது, மாறி வரும் கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மாறும் நிலைமையாக இருந்தாலும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவிட் நெருக்கடியின் போது சமூகத்தில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் கருவுறுதலைப் பாதுகாக்க அதிக பெண்களை வழிவகுத்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

கருமுட்டை உறைய வைத்தல் 

கருமுட்டை உறைய வைத்தல் என்பது, செயற்கைக் கருத்தரிப்பு நுட்பத்தின் ஒரு நுட்பமாகும். கருமுட்டை வங்கியில், பெண்களின் கருமுட்டைகளை உறைய வைத்துப் பின்னர் பயன்படுத்தலாம். கருமுட்டை உறைதல் செயல்முறையில், முதிர்ந்த கருமுட்டைகள் கருப்பையிலிருந்து அகற்றப்பட்டு, ஆய்வகத்தில் பாதுகாப்பாக உறைய வைக்கப்படுடுகின்றன.

எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படும் கருமுட்டைகள்

இப்படி கருமுட்டை வங்கியில் உறைநிலையில் பாதுகாக்கப்படும் கருமுட்டைகள், எதிர்கால பயன்பாட்டிற்கு ஏற்றச் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் உறைய வைக்கப்படும் கருமுட்டைகளை தேவைப்படும்பொழுது பயன்படுத்தி குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | குழந்தை பெற திட்டமா? கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

கருவுறுதலை உறுதி செய்யும் தொழில்நுட்பம்

உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் விந்தணுக்களை செலுத்தி, அதன் பிறகு கருவுற்ற முட்டையைப் பெண்ணின் கருப்பையில் செலுத்தலாம். பல்வேறு காரணங்களுக்காக, தான் விரும்பும் நேரத்தில் குழந்தைகளைப் பெற விரும்பும் பெண்கள், தங்கள் கருவுறுதலைப் பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இங்கிலாந்தில் கருமுட்டை சேமிப்பு

கருமுட்டைகளை உறைய வைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தாலும், இங்கிலாந்தில் வியத்தகு உயர்வு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியாக வாழ விரும்பும் பெண்கள் இடையே இந்தப் போக்கு அதிகரித்து வருவதாகவும், குழநதை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தால், அவர்கள்ள் IVF தொழில்நுட்பம் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதை தேர்வு செய்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையத்தின் (HEFA) அறிக்கையின்படி, பிரிட்டனில் வேகமாக வளர்ந்து வரும் கருவுறுதல் சிகிச்சை முறைகளான முட்டை மற்றும் கருவை உறைய வைப்பதன் மூலம் முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் நடைமுறைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் படிக்க | Pregnancy Tips: கருச்சிதைவுக்குப் பிறகு IVF? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

முட்டை உறைதல் மற்றும் சேமிப்பு 2019 இல் 2,576 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இத்வுஏ, 2021 இல் 4,215 ஆக அதிகரித்தது (64% உயர்வு), அதே நேரத்தில் கரு சேமிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அப்போது அதற்கான வாய்ப்புகள் உயிரியில்ரீதியாக குறைவாக இருந்தால் அந்த சிக்கலைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பத்தை பெண்கள் நாடுகின்றனர். கருவுறுதலைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் தங்கள் முட்டைகளை உறைய வைக்க விரும்பும் பெண்களின் எண்ணிக்கையில் கோவிட் தொற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கருவுறுதல் சிகிச்சை பெறும் பெண்களின் வயது

இதற்கிடையில், ஐவிஎஃப் மூலம் கருவுறுதல் சிகிச்சை பெறும் பெண்களின் சராசரி வயது 36 ஆக உயர்ந்துள்ளது. இயற்கையாக கருத்தரிக்கும் பெண்களின் சராசரி வயது கிட்டத்தட்ட 31 என்று கூறப்படுகிறது. கர்ப்ப விகிதங்கள் அதிகரித்திருந்தாலும், வெற்றிக்கான வாய்ப்பு வயதுக்கு ஏற்ப குறைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | கர்ப்பப்பை அகற்றம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

கருமுட்டையை பாதுக்காக்க வேண்டிய அவசியம் என்ன?

மாறி வரும் காலச்சூழல், மருத்துவ தேவைகள், மாறிவரும் விருப்பங்கள் உட்பட பல காரணங்கள், கருமுட்டையை உறைய செய்யும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிரது. குழந்தை பெறுதலை தள்ளிப்போட விரும்பும் பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் இந்த தொழில்நுட்பம் மூலம் தங்களின் கருமுட்டை தரமான இருக்கும் இளம் வயதிலேயே அதை எதிர்கால தேவைகளுக்காக பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் வேலை மற்றும் தொழிலில் எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்க விரும்பும் பெண்கள் அல்லது குடும்ப சூழல் காரணமாகக் குழந்தை பெறுதலை தள்ளிப்போட விரும்பும் பெண்கள், கருமுட்டை உறைதல் செயல்முறையை பற்றி சிந்திக்கும் காலம் தொடங்கிவிட்டது என்பது கருமுட்டை உறைதல் என்ற தெரிவை நோக்கி அவர்களை நகர்த்துகிறது.  

மேலும் படிக்க | தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் இந்திய வீரர்... இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News