கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..!!!

சில நாடுகளின் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தாண்டவத்தை தொடக்கியுள்ளது.  கோவிட் 19 பாதிப்புகள்  அதிகரிப்பதைக் கண்டு, சில நாடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 01:10 PM IST
  • சில நாடுகளின் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தாண்டவத்தை தொடக்கியுள்ளது.
  • கோவிட் 19 பாதிப்புகள் அதிகரிப்பதைக் கண்டு, சில நாடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றன.
  • இரவு விடுதிகள் மற்றும் நடனக் கூடங்கள் போன்ற பொதுக் கூட்டங்களுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது.
கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..!!! title=

சில நாடுகளின் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தாண்டவத்தை தொடக்கியுள்ளது.  கோவிட் 19 பாதிப்புகள்  அதிகரிப்பதைக் கண்டு, சில நாடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றன.

உலகை ஆட்டிப் படைக்கும்  கொரோனா வைரஸ்  முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. சற்று ஓய்ந்து இருந்த சில நாடுகளில் கூட, இப்போது, மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இதை செக்ண்ட் வேவ், அதாவது  'வைரஸின் இரண்டாவது அலை' என்று அழைக்கின்றனர். மார்ச் மாதத்தில் கடுமையான லாக்டவுனை விதித்த பல நாடுகள் சில வழிகாட்டுதல்களுடன் பொது இடங்களைத் திறக்கத் தொடங்கின. இருப்பினும், கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பதைக் கண்டு சில நாடுகள் தொற்றுநோயைப் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் அறிவிக்க தொடங்கியுள்ளன.

நேபால்:

இந்த நாட்டில், கொரோனா வைரஸ் பரவல், இப்போது சீனாவை விட அதிகம் இருப்பதால், நேபாளம் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக, உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 04) தெரிவித்துள்ளன. நேபாளத்தில் மார்ச் மாதத்தில் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது, வைரஸ் பரவுவதைத் தடுக்க, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தியது.

ALSO READ | Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!

பாரிஸ்:

பாரிஸில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் கஃபேக்கள் இரண்டு வாரங்களுக்கு மூட பிரான்ஸ் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிரான்சின் மற்றொரு பெரிய நகரமான மார்சேயில், பார்கள் மற்றும் உணவகங்கள் 15 நாட்களுக்கு முழுமையாக மூட  கடந்த வாரம் உத்தரவிடப்பட்டன. நாடு தழுவிய லாக்டவுன் நீக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு புதிய நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புக்கள் அதிகரித்து வருவதால், சமூக விலகல் குறித்த புதிய விதிகள் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.

ஜெர்மனி:

இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பொது விழாக்கள் போன்ற சமூகக் கூட்டங்களுக்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை ஜெர்மனி நீட்டித்துள்ளது.  அக்டோபர் 1 முதல், அதிக தொற்று பரவல் உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் 14 நாட்களுக்கு குவாரண்டைனில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  மாஸ்க் அணியாமல் இருந்தால், ஜெர்மனியில் 50 யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.

ஸ்பெயின்:

வைரஸ்  தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயின்,  சமூகக் கூட்டங்களில் கூட அதிகபட்சம் ஆறு நபர்களுக்கு மட்டுமே கலந்து கொள்ளலாம் என விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. கடைகள் மற்றும் பார்கள் போன்ற பொது இடங்களில் மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வெளியில் செல்லும்போது முகமூடி அணிய வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலி:

இரவு விடுதிகள் மற்றும் நடனக் கூடங்கள் போன்ற பொதுக் கூட்டங்களுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகமூடி அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 6 வயதுக்கு மேற்பட்ட, பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முகமூடி அணிவது கடமையாகும்.

நெதர்லாந்து:

நெதர்லாந்தில் செப்டம்பர் 29 அன்று ஒரு விளையாட்டு நிகழ்வில் கூட பார்வையாளர்கள் கலந்து கொள்ள அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  சமூகக் கூட்டங்களிலும் மூன்று நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய நகரங்கள் மற்றும் பார்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமாக உள்ளது.

ALSO READ | பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News