நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் உறங்குகிறார்,இருப்பினும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை என ஜப்பானை சார்ந்த ஒரு நபர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டினை சார்ந்தவர் தைசுகே ஹோரி(36) (Daisuke Hori). இவர் ஜப்பான் நாட்டில் உள்ள ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷனின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 12 வருடமாக இவர் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உறங்குவதாக கூறப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் உறங்கினாலும் தனது உடல் மிகவும் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் ஹோரி தெரிவிக்கிறார்.
உறங்கும் நேரத்தினை குறைப்பது எப்படி…???? என 100 க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சியையும் அளித்து வருவதாகவும் அவர் கூறுகிறார். இந்த விஷயம் தொடர்பாக தைசுகே ஹோரி தெரிவிக்கையில், "அனைவரை போலவும் நானும் வழக்கமாக 8 மணிநேரம் உறங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால், பல வேலைகள் அதனால் பாதித்தது. இதனால் தூங்கும் நேரத்தினை குறைக்க தொடங்கினேன்.
சிறிது சிறிதாக முயற்சித்து, கடந்த 12 வருடமாக நாளொன்றுக்கு 30 நிமிடம் மட்டுமே உறங்குகிறேன். சில நாட்களில் 30 நிமிடத்திற்கும் குறைவாகவே உறங்கி எழுந்துவிடுவேன். இதனால் எனக்கு எந்த விதமான உடல்நல பாதிப்பும் தற்போது வரை ஏற்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்றும் தெரியவில்லை " என்று தெரிவித்தார்.
தமிழ் புராணப்படி இலங்கையை ஆட்சி செய்து வந்த இலங்கேஸ்வரனின் சகோதரர் கும்பகர்ணன் தூக்கத்திலேயே தனது வாழ்நாட்களை கடத்தினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் நாளொன்றுக்கே 30 நிமிடம் தான் தூங்குகிறார்.கும்பகர்ணனுக்கு நேரெதிர் நபராக ஹேரி இருந்து வருகிறார் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR