Barcode Tattoo: பார்கோடு டாட்டூவை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருக்கலாம், உண்மையில் பார்கோடு என்பது பொருள் அல்லது விலையை ஸ்கேன் செய்வதற்கு பயன்படுவது. இதை ஒரு நபர் உடலில் பச்சை குத்திக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் தங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர். டாட்டூ என்று பரவலாக அறியப்படும் இதை, படம், சின்னம் அல்லது வார்த்தைகள், பிடித்த பெயர்களை தங்கள் உடலில் பதித்துக் கொள்வார்கள். ஆனால்யாராவது பார்கோடு டாட்டூ குத்திக் கொண்டிருப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருக்கதா? விசித்திரமான செய்கைகள் தானே சமூக ஊடகங்களில் வைரலாகிறது?
ஸ்மார்ட்போன் உலகில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, பணப்பரிமாற்றம் இப்போது முற்றிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இல்லை. மக்கள் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைனில் பணம் செலுத்த விரும்புகிறார்கள்.
கையில் பார்கோடு டாட்டூ
பெரும்பாலான மக்கள் கார்டுகள் அல்லது பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்துகிறார்கள், இவை பொதுவாக இந்தியாவில் UPI பேமெண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் மொபைலில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து, ஆப்ஸ் மூலம் பணம் செலுத்தும் முறை இது.
இதுதான் பிரபலமாக இருந்தாலும், அனைவரும் இன்னும் நவீன பணம் செலுத்தும் மற்றும் பெறும் முறைக்கு மாறவில்லை என்ற நிலையில், இதற்கு அடுத்தக்கட்டம் என்று மலைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் படிக்க | ஒருத்தனுக்கு ஒருத்தி மட்டுமே! பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பிரதேசம் முடிவு
தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், யாரும் எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சிகரமான செயலைச் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தனது போனை எடுக்க வேண்டுமா என்று நினைத்திருக்கிறார்.
ஆன்லைனில் பணம் செலுத்த வசதியாக, தனது கையில் பார்கோடு பச்சை குத்தியுள்ளார்.திகைப்பாக இருக்கிறதா? ஆம், இது கற்பனையல்ல நிஜமான சம்பவம். ஒவ்வோரு முறையும் போனை எடுத்து பணம் கொடுப்பதில் இருந்து கஷ்டமாக இருப்பதால் இவ்வாறு செய்துள்ளார் இந்த சோம்பேறி மனிதர்.
சோம்பேறித்தனத்தின் உச்சகட்டம்
தைவானைச் சேர்ந்த ஒருவர், பணம் செலுத்த ஒவ்வொரு முறையும் தனது தொலைபேசியை எடுத்து எடுத்து சோர்வடைந்துவிட்டதால், விசித்திரமான தீர்வைக் கண்டுபிடித்தார். அவர் தனது பேமெண்ட் பார்கோடை கையில் பச்சை (Tattoo) குத்திக்கொண்டார், இப்போது பணம் செலுத்த வேண்டிய போதெல்லாம் அவர் தனது கையை காட்டுகிறார். அவரது கையைக் காட்டினால் பணம் செலுத்தப்பட்டுவிடும்.
இந்த புத்திசாலி நபர் யார் என்ற அடையாளம் வெளியிடப்படவில்லை, ஆனால் இப்போது அவர் தைவானில் பிரபலமாகிவிட்டார். அவரது பார்கோட் டாட்டூ நாட்டின் சமூக ஊடக தளமான 'Dcard' இல் வைரலாகி வருகிறது. சமூக ஊடக பயன்பாட்டில் வெளியிடப்பட்ட வீடியோவில், அந்த நபர் பச்சை குத்துவது பற்றி நீண்ட காலமாக யோசித்து வருவதாகக் கூறினார். அப்போதுதான் அவருக்கு இந்த தனித்துவமான யோசனை தோன்றியதாம்.
கையை நீட்டினால், பணம் செலுத்திவிடலாம் என்பது எவ்வளவு ஆபத்தான விஷயம். பணத்தை வாங்க வேண்டுமானால் அது உபயோகமாக இருக்கலாம். மாத்தி யோசி என்பதற்காக, விளையாட்டாய் செய்யும் சில விஷயங்கள் பின்னர் விபரீதமாய் மாறிவிடும். இந்த செய்தியை படித்து விட்டு யாரும் பார்கோட் டாட்டூ குத்த கிளம்பிவிட வேண்டாம்.
மேலும் படிக்க | Credit Card: இலவச விமானப் பயணம் செய்ய ரெடியா? விமான டிக்கெட்டுகள் இலவசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ