Uniform Civil Code: நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒவ்வொரு மாநிலமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. நாட்டின் ஒரு பெரிய மாநிலம், தனது பொதுமக்கள் குடிமைச் சட்டத்தில், ஒரு ஆணுக்கு ஒரு மனைவி மட்டுமே இருக்க முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் அல்லது சீரான குடிமைச் சட்டத்தை உருவாக்கும் திசையில் வெவ்வேறு மாநிலங்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றன என்று பொதுவாக கூறப்பட்டாலும், இந்த விஷயம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சூத்திரமாக மாறியிருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
உத்தரகாண்ட், குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்று தற்போது மத்தியப் பிரதேச பாஜக அரசும் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த சட்டஜ் அமலுக்கு வந்த பிறகு, அனைத்து ஆண்களுக்கும் ஒரே ஒரு மனைவி மட்டுமே இருக்க உரிமை உண்டு, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
'நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவத ஆதரவு'
'நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன். இதற்காக மத்திய பிரதேசத்திலும் கமிட்டி அமைக்க உள்ளோம். திருமணம் போன்ற புனித உறவின் பெயரில் பழங்குடியின சகோதர, சகோதரிகளின் நிலத்தை அபகரிப்பதற்காக ஏமாற்றுபவர்கள், இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, தவறுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் மீது கிராமசபை நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று திண்டோரியில் நேற்று (டிசம்பர் 2, வியாழன்) மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
மேலும் படிக்க | e₹-R: இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில்
'பழங்குடியின பெண்ணை திருமணம் செய்து நிலத்தை அபகரித்தல்'
இது குறித்து விளக்கமாக பேசிய முதல்வர் சவுகான், 'சில நேரங்களில் பெரிய விளையாட்டுகள் நடக்கும். தங்களால் நிலத்தை எடுக்க முடியாவிட்டால், பழங்குடியினரின் பெயரில் நிலத்தை எடுத்தார். பழங்குடியின பெண்ணை திருமணம் செய்து,நிலத்தை மனைவி என்ற பெயரில் அவருக்கு நிலத்தை வாங்கி பயன்படுத்தும் மோசடிக்காரர்களும் உள்ளனர். நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். இனிமேல், பெண்ணை திருமணம் செய்து அதன் மூலம் நிலமோசடி செய்யும் விஷயம் நடக்காது. இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற விஷயத்திற்குக் நான் ஆதரவாக இருக்கிறேன். ஒருவர் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள வேண்டும்? நாம் அதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
'ஒரு திருமணம் மட்டுமே செல்லும்'
தேர்தலுக்கு முன் பொது சிவில் சட்டம் தொடர்பான ஒரு பெரிய விஷயத்தைக் கையில் எடுத்துள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 'ஒரு நாட்டில் ஏன் இரண்டு சட்டங்கள் இருக்க வேண்டும், ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்திலும் ஒரு குழுவை அமைக்கிறேன். ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தில் ஒரு மனைவி இருக்க உரிமை இருந்தால், அனைவருக்கும் ஒரு மனைவி மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்துக் கொண்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | 40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் - மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு
'பாஜக அரசியல் சாசனத்தை மீறுகிறது'
அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாரதிய ஜனதாக் கட்சியின் இந்த அறிவிப்பால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாபா சாகேப் அம்பேத்கர் சமத்துவத்தின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை இயற்றினார் என்றும், பாஜக பேசும் சமத்தும் வெறும் அரசியல் என்றும் கூறியுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, பிரச்சினைகளை திசைதிருப்பும் அரசியல் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி பிரதாப் பானு சர்மா கூறினார். நாட்டின் அரசியலமைப்பை தனக்கு பிடித்த முறையில் மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இது அம்பேத்கரையும், அரசியல் சாசனத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: காங்கிரஸின் 100 தலை ராவணன் கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ