செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சிக்கியது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், கணக்கில் வராத 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 60 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2023, 10:17 PM IST
  • செந்தில் பாலாஜி வீட்டில் சிக்கியது என்ன?
  • அமலாக்கத்துறை கொடுத்துள்ள விளக்கம்
  • கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் முடக்கம்
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சிக்கியது என்ன?  title=

தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அன்று நள்ளிரவில் விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, தான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என கருதிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக சென்னை ஓமந்தூரரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை கைது செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்தது.

மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

 அதன்பின்னர், சிகிச்சைக்காக நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அந்த சோதனையின் முடிவில் 22 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் வராத 16.6 லட்சம் ரூபாய் சொத்துகளை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 60 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இதன்பின்னர் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவும் அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க உள்ளது. இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறார். இருப்பினும் அவரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீக்கவில்லை. நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாதவரை அமைச்சராக தொடரலாம் என்பதாலும், ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் சேர்க்கவும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்பதாலும், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என திமுகவினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News