அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த செனைடா மரிய சோடா (23) என்ற இளம்பெண், கடந்த நவ. 20ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அவரின் காதலன் உள்பட குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில், காதலனின் வீட்டில் புகுந்து, வீட்டிற்கு தீ வைத்தது மட்டுமின்றி சில பொருள்களையும் திருடிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சோடைவை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார்,"சோடா அவரின் காதலருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அந்த அழைப்பை வேறொரு பெண் எடுத்துள்ளார். இதனால், கோபமடைந்த சோடா, காதலனின் வீடு புகுந்து சோபாவில் தீ வைத்துள்ளார். உடனடியாக வீடு முழுவதும் தீ பரவிவிட்டது.
மேலும் படிக்க | தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!
வீடு எரிவதை அங்குள்ளவர்கள் வீடோய எடுத்துள்ளனர். அதில், அவர் சோபாவுக்கு தீ வைத்தது தெரியவந்தது. வீடு முழுவதும் தீக்கரையான நிலையில், சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன" என தெரிவித்தனர்.
அதாவது, தன்னுடைய காதலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அந்த பெண் தவறாக நினைத்துள்ளார். காதலனின் போனை எடுத்தது அவரின் உறவினர் பெண் என்பது பின்னர்தான் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, வீட்டு சோபாவில் தீ வைத்த உடன், மீண்டும் தனது காதலனுக்கு வீடியோ கால் செய்த சோடோ,"உன் பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என பயங்கரமாக சிரித்துக்கொண்டே அழைப்பை துண்டித்துள்ளார்.
தொடர்ந்து, அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த பின்னர், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். மேலும், சோடா மீது தீ வைப்பு, திருட்டு வழக்கின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் அவரை போலீசார் கைதுசெய்தனர்.
மேலும் படிக்க | அமெரிக்கா: வெர்ஜீனியா வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ