தைவானை சீண்டுவதை நிறுத்தவும்.. இல்லை என்றால்; சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

தைவான், பிலிப்பைன்ஸ் எல்லையில் தொடர்ந்து  அத்துமீறி வரும் சீனாவுக்கு  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2021, 04:05 PM IST
  • நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா எந்த அளவிற்கும் செல்வும் தயங்காது என அதிபர் ஜோ பிடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
  • தைவானிய எல்லையில் சீனா அடிக்கடி ஊடுருவுவது குறித்து அமெரிக்கா பெய்ஜிங்கை எச்சரித்தது.
  • சீனா தனது விமானம் தாங்கி காப்பல்கள், நவீன போர்க்கப்பல்களை தைவானுக்கு நெருக்கமான நிறுத்தி சூழ்ச்சிகளை செய்து வருகிறது.
தைவானை சீண்டுவதை நிறுத்தவும்.. இல்லை என்றால்; சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை  title=

வாஷிங்டன்: சீனா தனது அத்துமீறல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால்,   கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா  (America) மீண்டும் சீனாவுக்கு (China) எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா சில காலமாக தைவான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. இரு நாடுகளையும் தொடர்ந்து தனது அத்துமீறல் நடவடிக்கையினால், அமெரிக்கா இப்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பெய்ஜிங் தனது அத்துமீறல்களை நிறுத்தவில்லை என்றால், பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்துள்ளது அமெரிக்கா.

தைவானிய எல்லையில் சீனா அடிக்கடி ஊடுருவுவது குறித்து அமெரிக்கா பெய்ஜிங்கை எச்சரித்தது. 

வழக்கமாக நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தைவான் மக்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். தைவானின் சமூக அல்லது பொருளாதார கட்டமைப்பிற்கு ஊறு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கிடைக்கும் என எச்சரித்துள்ளது சீனா.  நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா எந்த அளவிற்கும் செல்வும் தயங்காது என  அதிபர்  ஜோ பிடன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

ALSO READ | ரஷ்யா- உக்ரைன் எல்லை பிரச்சனை; விரைவில் மூன்றாம் உலகப் போர்?

தைவானும்  சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்து, கடைசி மூச்சு வரை சீனாவை எதிர்த்துப் போராடும் என்று கூறியுள்ளது.  சீனாவைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்றும் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளது. 

சீனா தனது விமானம் தாங்கி காப்பல்கள், நவீன  போர்க்கப்பல்களை தைவானுக்கு நெருக்கமான நிறுத்தி சூழ்ச்சிகளை செய்து வருகிறது. இது தவிர, கடந்த சில நாட்களாக, சீன போர் விமானங்கள் தைவானின் வான் எல்லையை தொடர்ந்து மீறி வருகின்றனர். எங்களை தற்காத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், ஒரு போரை நடத்தவும் தயாராக உள்ளோன்' என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், பிலிப்பைன்ஸிற்கும் தொல்லை கொடுத்து வருகிறது சீனா. 

சீனா பிலிப்பைன்ஸின் ஆயுதப்படைகளை குறிவைத்தாலோ, அல்லது அதற்கு எதிராக தென் சீனக் கடலில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாலோ, அமெரிக்க-பிலிப்பைன்ஸ் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் எங்கள் கடமைகளை நிறைவேற்ற அமெரிக்கா தயங்காது ன்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒரு Selfie; ஹெலிகாப்டருடன் செல்பி எடுத்த  நாசா விண்கலம் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News