டிரம்புக்கு எதிராக முன்னாள் எப்பிஐ அதிகாரி வாக்குமூலம்!!

Last Updated : Jun 9, 2017, 01:34 PM IST
டிரம்புக்கு எதிராக முன்னாள் எப்பிஐ அதிகாரி வாக்குமூலம்!! title=

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையை நடத்தி வந்த எப்.பி.ஐ.யின் இயக்குனர் ஜேம்ஸ் கோமியை சமீபத்தில் அதிபர் டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் தனது பதவி நீக்கம் தொடர்பான அமெரிக்க செனட் சபையின் விசாரணையின் போது, ஜேம்ஸ் கோமி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அப்போது அதில் அவர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் மீதான ரஷ்ய தொடர்பு குறித்த விசாரணையை கைவிடுமாறு டிரம்ப் அழுத்தம் தந்தார். டிரம்பை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்று பகிரங்கமாக கூறுமாறும் அழுத்தம் தந்தார் என்று கூறி உள்ளார். 

ஜேம்ஸ் கோமி அளித்துள்ள வாக்குமூலம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜேம்ஸ் கோமிக்கு டிரம்ப் அழுத்தம் தந்தது, நீதியை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு வழிவகுத்துள்ளது.

Trending News