பாகிஸ்தானை காப்பாற்ற நினைத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்ட துருக்கி

FATF எடுத்துள்ள நடவடிக்கை  காரணமாக துருக்கியின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2021, 03:06 PM IST
  • பாகிஸ்தானை காப்பாற்ற நினைத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்ட துருக்கி
  • பாகிஸ்தானின் நட்பு காரணமாக அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில் துருக்கி
  • பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கி மீது FATF நடவடிக்கை
பாகிஸ்தானை காப்பாற்ற நினைத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்ட துருக்கி title=

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்து வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் துருக்கி, அதற்காக பெரும் விலை கொடுக்க நேரிடலாம். வரும் நாட்களில் துருக்கியின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுடனான அதன் உறவுகளும் பாதிக்கப்படும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், சமீபத்தில், பயங்கரவாத நிதியைக் கண்காணிக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force - FATF), துருக்கியுடன் மாலி மற்றும் ஜோர்டானையும் அதன் சாம்பல் பட்டியலில் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே இந்தப் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FATF எடுத்துள்ள நடவடிக்கை  காரணமாக துருக்கியின் (Turkey) பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு, அதிக விலை கொடுக்க நேரிட்டுள்ளது.  மேலும் ​​FATF எடுத்துள்ள  பாகிஸ்தான் - துருக்கி இடையிலான உறவை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

ALSO READ | Benjamin Netanyahu: சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு; திவீரமடையும் ஊழல் வழக்கு..!!

FATF எடுத்துள்ள இந்த நடவடிக்கை காரணமாக, இனிவரும் காலங்களில் இஸ்லாமாபாத்திற்கு முன்பு போல் துருக்கி உதவி செய்ய இயலாது. காஷ்மீர் (Kashmir) விவகாரத்தில் பாகிஸ்தான் துருக்கியின் ஆதரவைப் பெற்று வரும் நிலையில், FATF இன் முடிவுக்குப் பிறகு, பாகிஸ்தானில் நிலைமை நிச்சயமற்றதாகவே உள்ளது. வரும் நாட்களில் துருக்கிக்கும் நிலைமை மோசமாகலாம்.

சாம்பல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியைப் பெறுவது கடினம். இதுமட்டுமின்றி, FATF நிர்ணயித்த விதிகளை கடைபிடிக்காத பட்சத்தில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. FATF குழுவின் அடுத்த கூட்டம் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், FATF  வெளியிட்டுள்ள் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேறுவது துருக்கி அதிபர் முன் உள்ள மிகப் பெரிய சவாலாகும்.

ALSO READ | தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு தலை வணங்க மறுக்கும் லிதுவேனியா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News