North Korea:கடுமையான உணவு பற்றாக்குறை, வாழைப்பழம் விலை ரூ.3000/கிலோ

அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவு வலிமை கொண்டுள்ள வட கொரியாவால் நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது வேதனையைத் தருகிறது. வெளியே சொல்லவும் முடியாமல், அப்படியே இருக்கவும் முடியாமல் மக்கள் வேதனையில் வாடுகிறார்கள். 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 18, 2021, 08:18 PM IST
  • வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுகிறது.
  • கொரோனா தொற்று காரணமாக கிம் ஜாங் உன் அண்டை நாடுகளுடனான தனது நாட்டின் எல்லைகளை மூடினார்.
  • வட கொரியாவில் அண்டை நாடுகளுடனான வணிகம் ஸ்தம்பித்துள்ளது.
North Korea:கடுமையான உணவு பற்றாக்குறை, வாழைப்பழம் விலை ரூ.3000/கிலோ

பியோங்யாங்: வினோதம் மற்றும் மர்மத்தின் மறுபெயராய் இருக்கும் வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தான் உள்ளன. உலக நாடுகளுடன் ஒன்று சேராமல் இருக்கும் வட கொரியா அவ்வப்போது உலகுக்கு அணு ஆயுத அச்சுறுத்தலை காட்டி வருவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகும்.

எனினும், அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவு வலிமை கொண்டுள்ள வட கொரியாவால் (North Korea) நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது வேதனையைத் தருகிறது. வெளியே சொல்லவும் முடியாமல், அப்படியே இருக்கவும் முடியாமல் மக்கள் வேதனையில் வாடுகிறார்கள். 

வட கொரியாவில் உணவு நெருக்கடி பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் (Kim Jong Un) தனது நாடு கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்.

ALSO READ: North Korea: அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்- சபதம் போடும் கிம்

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ .3000 க்கு விற்கப்படுகிறது

கிம் ஜாங் உன் தனது கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தில், 'மக்களின் உணவுப் பிரச்சனை இப்போது பதட்டத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு தாக்கிய புயல் வெள்ளத்தால் விவசாயத் துறையில் தானிய உற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை.' என்று கூறினார். ஊடக அறிக்கையின்படி, இந்த பற்றாக்குறையால், தானியங்களின் விலைகள் வானத்தை எட்டத் தொடங்கியுள்ளன. வட கொரிய செய்தி நிறுவனமான என்.கே. நியூஸ்ஸின் படி, அங்கு வாழைப்பழம் ஒரு கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லைகள் மூடப்பட்டதால் வணிகம் ஸ்தம்பித்தது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Coronavirus Pandemic) காரணமாக வட கொரியாவில் இந்த உணவுப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் வட கொரியா பாதிக்கப்படாமல் இருக்க, கிம் ஜாங் உன் அண்டை நாடுகளுடனான தனது நாட்டின் எல்லைகளை மூடினார். 

இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் குறைந்தது. உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வட கொரியா சீனாவை சார்ந்துள்ளது. வட கொரியா இந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் டன் உணவு தானிய பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று தென் கொரியாவின் ஒரு அரசாங்க சிந்தனைக் குழுவான கொரிய அபிவிருத்தி நிறுவனம் கடந்த மாதம் கூறியது.

ALSO READ: North Korea: POP இசை கேட்டால் மரண தண்டனை; கிம் ஜாங் உன் மக்களுக்கு எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News