அமெரிக்க அதிபர் தேர்தல்களின் முடிவுகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்கான (American President) தேர்தல்கள் எப்போதுமே உலக மக்களால் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
இந்த தேர்தலின் மூலம் குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது இரண்டாவது பதவிக்காலத்தை நாடுகிறார். அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஜோ பிடன் துவக்கத்திலிருந்தே அவருக்கு சரியான போட்டியை அளித்து வந்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden) 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் புதன்கிழமை (நவம்பர் 4) விஸ்கான்சின் மாகாணத்தில் வெற்றியைப் பெற்று தேர்தல் வெற்றியில் ஒரு படி முன்னேறினார்.
பிடென் புதன்கிழமை தனது ஆதரவாளர்களுடன் உரையாற்றினார். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டவுடன் தான் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். மீதமுள்ள ஸ்விங் மாநிலங்களில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை விட தான் முன்னிலையில் இருப்பதாக பிடென் வலியுறுத்தினார்.
பிடன் வெற்றியை நோக்கி நெருங்கிய நிலையில், 10 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் கொண்ட விஸ்கான்சினில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய டிரம்ப் முயன்றுள்ளார். முன்னதாக, டிரம்ப் தேர்தலை "அமெரிக்க பொதுமக்கள் மீதான மோசடி" என்று கூறி, "வெளிப்படையாக, நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றோம்" என்று கூறினார்.
ALSO READ: US Elections: டிரம்ப்புக்கு வெற்றியா அல்லது ஜோ ஜெயிப்பாரா? பரபரப்பு தொடர்கிறது…..
"நீண்ட வாக்கு என்ணிக்கைக்குப் பிறகு, அதிபர் பதவியை வெல்வதற்குத் தேவையான 270 தேர்தல் வாக்குகளை எட்டுவதற்கு போதுமான மாநிலங்களை நாங்கள் வென்றிருக்கிறோம் என்பது தெளிவாகிறது" என்று பிடன் தனது சொந்த ஊரான டெலாவேரில் கூறினார்.
"நாங்கள் வென்றுவிட்டோம் என்று அறிவிக்க நான் இங்கு வரவில்லை, ஆனால் எண்ணிக்கை முடிந்ததும், நாங்கள் வெற்றியாளர்களாக இருப்போம் என்று நான் நம்புகிறேன் என அறிக்கை அளிக்கவே வந்தேன்" என்று பிடன் மேலும் கூறினார்.
பிடென் மிச்சிகன் மற்றும் அதன் 16 தேர்தல் வாக்குகளை வென்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தபோதும், டிரம்ப்பின் பிரச்சாரம் மிச்சிகனில் வாக்களித்த எண்ணிக்கையை நிறுத்திவைக்க ஒரு வழக்கை தொடுத்தது. எனினும், பிடென் அமைதியாகத் தோன்றி "ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்" என்று அறிவித்தார்.
"மிச்சிகனில், நாங்கள் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறோம், அது வளர்ந்து வருகிறது – அதிபர் டிரம்ப் 2016 இல் மிச்சிகனை வென்றதை விட கணிசமாக பெரிய வித்தியாசம் இது" என்று அவர் கூறினார்.
பென்சில்வேனியாவிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்று பிடன் நம்பிக்கை தெரிவித்தார். டிரம்ப் தற்போது ஒரு முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் ஜனநாயகக் கட்சியினராக பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனால் அவர் ஒரு அமெரிக்க அதிபராக நாட்டின் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மறந்து விட்டார் என்று பிடன் குறிப்பிட்டார்.
"அதிபர் பதவி என்பது ஒரு பாகுபாடு பார்க்கும் பதவி அல்ல. இது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தேசத்தில் உள்ள ஒரு அலுவலகம். இது அனைத்து அமெரிக்கர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையைக் கோருகிறது, அதைத்தான் நான் செய்வேன்" என்று அவர் கூறினார்.
"நாங்கள் எப்போதும் அமெரிக்காவுக்கு (America) செய்ததைச் செய்ய வேண்டிய நேரம் இது - பிரச்சாரத்தின் கடுமையான சொற்களையும் குற்றச்சாட்டுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, மீண்டும் ஒருவர் பால் ஒருவர் இயல்பு நிலைக்கு வந்து ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். ஒன்றுபட்டு ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR