விஜய் மல்லையா கோரிக்கை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரிப்பு!

வங்கி மோசடியில் விஜய் மல்லையா கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது!

Updated: May 9, 2018, 08:22 AM IST
விஜய் மல்லையா கோரிக்கை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரிப்பு!
ZeeNewsTamil

வங்கி மோசடியில் விஜய் மல்லையா கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இதன் படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஆனால், விஜய் மல்லையாவோ, உலகம் முழுவதும் தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நிராகரித்தார். கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தார்.

இதனால், இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளில் இருந்து கடன் பாக்கியை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.