பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்!

அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால்  உருவாக்கப்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2022, 01:39 PM IST
  • அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
  • கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். ம
  • நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
பாலியல் குற்றவாளிகள் வசிக்க ஆடம்பர வீடுகளை கொண்ட ‘தனி’ கிராமம்! title=

உலகில் தனித்துவம் நிறைந்த பல கிராமங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மருத்துவர்கள் அதிகம் வாழும் கிராமம் அல்லது வழக்கறிஞர்கள் அதிகம் உள்ள கிராம், அல்லது விளையாட்டு வீரர்களுக்கு புகழ்பெற்ற கிராமம் என பல விதமான கிராமங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது போன்ற  தகவலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உங்களுக்கு சற்று விசித்திரமாகத் தோன்றும், ஆனால் அது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளுக்காகவே, அமெரிக்காவின் இந்த கிராமம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் புளோரிடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமம் 2009 ஆம் ஆண்டு பாஸ்டர் டெக் விடெரோ என்பவரால்  உருவாக்கப்பட்டது. பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்று, தண்டனை காலத்தை  நிறைவு செய்தவர்கள் மீண்டும் சமூகத்தில் சேரலாம் என்பதே இதன் நோக்கம். இந்த கிராமத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள் வாழ்கின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்தவர்கள். மற்றும் அவர்களின் பெயரை நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. எனினும், இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் படிக்க | DART Mission: பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!

பாலியல் குற்றாவாளிகளுக்கான இந்த தனிப்பட்ட கிராமத்தில், ஒரே மாதிரியாக, ஆடம்பரமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என ஃபர்ஸ்ட் கோஸ்ட் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. புளோரிடா மாநில சட்டங்களின்படி, பாலியல் குற்றவாளிகள் பள்ளி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆயிரம் அடிக்குள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கூட, இந்த கிராமத்தில் குடியேறியுள்ளனர். இங்கு குடியேறியவர்களில் ஒருவரான பாட் பவர்ஸ் கூட பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர். விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்களுடன் உடலுறவு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News