Watch Video: காபூலில் பாகிஸ்தானுக்கு எதிரான பேரணியை கலைக்க தாலிபான் துப்பாக்கிச் சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகரில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவர் பயணம் மேற்கொண்ட சிறிது நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானிற்கு எதிரான போராட்டம் தீவிமடைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 7, 2021, 05:29 PM IST
Watch Video: காபூலில் பாகிஸ்தானுக்கு எதிரான பேரணியை கலைக்க தாலிபான் துப்பாக்கிச் சூடு title=

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை எதிர்த்து காபூலில் தெருக்களில், போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களை கலைக்க தலிபான்கள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 7, 2021) துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்த போராட்டங்கள் நடைபெற்றதாகவும், ஆப்கானிஸ்தான் தலைநகரில் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) தலைவர் பயணம் மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் உளவுத் தலைவர் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை காபூலுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தான் (Afghanistan) இராணுவத்தை மறுசீரமைக்க தாலிபான்களுக்கு ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் உதவ முடியும் என்று கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட முதல் உயர் மட்ட வெளிநாட்டு அதிகாரி ஹமீத் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!

இஸ்லாமாபாத் குற்றச்சாட்டுகளை இந்த மறுத்தாலும், காபூலில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிரான இருபது ஆண்டு காலப் போராட்டத்தில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐ ஆதரவளிப்பதாக வாஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக திங்களன்று, ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது என்று தலிபான் உறுதியளித்தது. ஐஎஸ்ஐ தலைவர் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரை காபூலில் சந்தித்தார் என்பதை உறுதிப்படுத்தினார். 

ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News