மாயமான மலேசிய விமானத்தில் உதிரி பாகங்கள் மொரிஷியஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது, இதை மலேசிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு, 239 பேருடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் திடிரென மாயமானது. பல நாட்கள் தேடியும் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்க முடியபடவில்லை. அதேசமயம், விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாகவும் ஏற்கனவே மலேஷிய அரசு அறிவித்துவிட்டது. ஆனாலும் மாயமான விமானத்தை தேடும் பணியில் மலேசிய மற்றும் ஆஸ்திரேலியா தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மொரிஷியஸ் தீவு அருகே விமானத்தின் உதிரிபாகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 விமானத்தின் உதிரிபாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். மாயமான எம்.எச். 370 விமானத்தின் உதிரிபாகங்கள் தான் என மலேசிய அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்