உலகில் முதல் குறுஞ்செய்தியான 'MERRY CHRISTMAS' ரூ.91 லட்சத்திற்கு ஏலம் !

உலகில் முதன் முதலாக அனுப்பட்ட குறுஞ்செய்தியான  'MERRY CHRISTMAS' எனும் வாசகம் ரூ.91 லட்சத்திற்கு ஏலம் போனது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 08:59 PM IST
உலகில் முதல் குறுஞ்செய்தியான 'MERRY CHRISTMAS' ரூ.91 லட்சத்திற்கு ஏலம் !   title=

பாரிஸ்: உலகில் முதன் முதலாக அனுப்பட்ட குறுஞ்செய்தியான  'MERRY CHRISTMAS' எனும் வாசகம் ரூ.91 லட்சத்திற்கு ஏலம் போனது. உலகின் முதன் முதலாக குறுஞ்செய்தி சேவை தொடங்கப்பட்டு, முதன் முதலாக அனுப்பட்ட குறுஞ்செய்தியான  'MERRY CHRISTMAS' எனும் வாசகம் சமீபத்தில் பாரிஸில் நடந்த ஏலம் ஒன்றில் சுமார் ரூ.91 லட்சத்திற்கு NFT ( Non-Fungible Token) ஆக விற்கப்பட்டுள்ளது.  இந்த குறுஞ்செய்தியினை வோடபோன் ஊழியர் நீல் பாப்வொர்த் என்பவர் அவரது மேலாளருக்கு அனுப்பியுள்ளார்.

ALSO READ | முன்பைவிட பூமி தற்போது அதிவேகமாக சுழல்கிறது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த குறுஞ்செய்தி ஏலம் எடுக்கப்பட்டது.  இந்த ஏலத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை அகதிகளின் நலவாழ்வுக்காக UNHCR-க்கு கொடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது.  இந்த குறுஞ்செய்தியினை  வோடபோன் ஊழியர் நீல் பாப்வொர்த்  அவரது கணினியிலிருந்து யுனைடெட் கிங்டமில் உள்ள ஒரு மேலாளருக்கு அனுப்பியுள்ளார்.

message

அந்த குறுஞ்செய்தியினை அவர் தனது 2 கிலோ எடைகொண்ட ஆர்பிடெல் மொபைலில் பெற்றுள்ளார்.  அவர்கள் ஆண்டு நிகழ்வுகளின் இறுதியில் இருந்ததால் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியதாக ஏலத்தின் போது தெரிவிக்கப்பட்டது.  கண்ணனுக்கு தெரியாத பொருட்களை விற்பது பிரான்சில் சட்டபூர்வமானது கிடையாது.  அதனால் இந்த குறுஞ்செய்தி டிஜிட்டல் முறையில் தொகுக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

ALSO READ | தனது முகத்தில் ஆசிட் வீசிய காதலனையே கரம் பிடித்த காதலி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News