சீன அதிபரை நெருங்கிவிட்டதா சீன வைரஸ்? Xi Jinping-ன் தொடர் இருமலுக்கு என்ன காரணம்?

வைரஸ் முதலில் பரவியபோதும், ஜி ஜின்பிங் மர்மமான முறையில் உலகின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 01:16 PM IST
  • சீன அதிபர் ஒரு உரையின் போது தொடர்ந்து இருமியதால் பல ஊகங்கள் கிளம்பியுள்ளன.
  • ஜின்பிங்கிற்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • வுஹானில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல தலைவர்களை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது.
சீன அதிபரை நெருங்கிவிட்டதா சீன வைரஸ்? Xi Jinping-ன் தொடர் இருமலுக்கு என்ன காரணம்?  title=

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உடல்நலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. சில தகவல்களின்படி, ஜி ஜின்பிங் நோய்வாய்ப்பட்டுள்ளார். ஷென்ஜனில் கம்யூனிஸ்ட் கட்சியின் உரையின் போது, ​​அவருக்கு தொடர்ந்து பல முறை இருமல் ஏற்பட்டதற்கு இதுவே காரணம். உரைக்கு மத்தியில் அவர் அடிக்கடி பேசுவதை நிறுத்த வேண்டியிருந்தது.

ஜி ஜின்பிங்கிற்கு (Xi Jinping) மிக அதிகமாக இருமல் வந்துகொண்டிருந்தது. நாகரிகம் கருதி ஊடக கேமராக்களும் சீன அதிபரிடமிருந்து விலகிச் சென்றன. இருப்பினும் ஜி ஜின்பிங்கின் இருமல் ஓசை தொடர்ந்து கேமராவில் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த முழு சம்பவத்திற்கும் பிறகு, ஜி ஜின்பிங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டதாக செய்தி வேகமாக பரவி வருகிறது.

பீதியில் ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஷென்ஜெனில் நடந்த (ஜி ஜின்பிங்கின் இருமல்) சம்பவம், ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமை மிகவும் பீதியடையச் செய்ததாக ஒரு ஹாங்காங் (Hongkong) செய்தித்தாள் எழுதியது. அவர் அடைந்த பிதியில் அவர் ஜி ஜின்பிங்கிடமிருந்து விலகியே நின்றார். ஜின்பிங் மீண்டும் மீண்டும் இருமிக்கொண்டிருந்தார், தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார்.

ALSO READ: ‘Get lost’ என்று கூறி, இந்திய ஊடகங்களுக்கு போதித்த சீனாவுக்கு பதிலளித்த Taiwan

கொரோனாவின் பிடியில் வந்த உலகத் தலைவர்கள்

வுஹானில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் (Corona Virus), உலகின் பல தலைவர்களை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ, பொலிவியா, குவாத்தமாலா, ஹோண்டுராசின் அதிபர்கள், ஆர்மீனியாவின் பிரதமர் ஆகியோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இப்போது ஜி ஜின்பிங்கின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுமோ என்ற ஊகங்கள் பரவலாக பரவி வருகின்றன.

ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனெனில் சீனா (China) வெளிப்படைத்தன்மைக்கு அறியப்படும் ஒரு நாடல்ல. வைரஸ் முதலில் பரவியபோதும், ஜி ஜின்பிங் மர்மமான முறையில் உலகின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அவர் ஒரு முறை அல்ல, இரண்டு முறை பொது வாழ்க்கையிலிருந்தும், மக்கள் கண்களிலிருந்தும் மறைந்திருக்கிறார். மேலும், முகக்கவசம் இல்லாமல் பல இடங்களில் காணப்பட்டார். சீனா வைரஸை தோற்கடித்து விட்டது என்பதை நிரூபிக்க அவர் அப்படி செய்தார்.

அவர் லாக்டௌனை முடித்து நீச்சல் குள விருந்துகளுக்கும் அனுமதி அளித்தார். ஆனால் இப்போது அவரது அந்த பொறுப்பற்ற நடவடிக்கைகள் அவரை அச்சுறுத்துகின்றன.

ஜின்பிங் இருமும்போது, ​​சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தலைவர்களும் அங்கு இருந்தனர். சீன அதிபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், இந்த அனைத்து தலைவர்களும் கூட வைரசின் பிடியில் சிக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்படலாம் என்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

ALSO READ: சீனாவில் அராஜகம்: உண்மை பேச எண்ணிய உள்ளம் விலையாகக் கொடுத்தது தன் உயிரை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News