ஐரோப்பிய கால்பந்து சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸினடீன் ஸிடேன் அணியில் இருந்து விலகல்!!
உலகின் மிகப்பெரிய அணியாக கருதப்படும் ரியல் மாட்ரிட்டின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2.5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸிடேன், இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு, ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளர் பெனிடெஸின் கீழ் அந்த அணி மிகவும் மோசமாக விளையாடி, பரம எதிரிகளான பார்சிலோனாவிடம் 4-0 என தோல்வியடைந்தது.
No tengo palabras para agradecerte todo lo que has hecho por este vestuario, por el Real Madrid y por el madridismo. Ha sido un orgullo y un privilegio tener como entrenador a mi ídolo. Eterno Zizou. pic.twitter.com/wjK45SMQz7
— Casemiro (@Casemiro) May 31, 2018
இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் ஸிடேன் நியமிக்கப்பட்டார். ஜூனியர் அணிகளுக்கு மட்டுமே பயிற்சியாளராக இருந்து வந்த ஸிடேன் மாட்ரிட் போன்ற பெரிய அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
Míster, como jugador y ahora como entrenador, decidiste despedirte en lo más alto. Gracias por dos años y medio de fútbol, trabajo, cariño y amistad. Te vas pero tu legado ya es imborrable. Uno de los capítulos mas exitosos de la historia de nuestro querido @realmadrid pic.twitter.com/LtyEE5g71k
— Sergio Ramos (@SergioRamos) May 31, 2018
ஆனால், ரியல் மாட்ரிட் 2016, 2017, 2018 என தொடர்ந்து 3 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்தது. 2017-ம் ஆண்டின் ஸ்பானிஷ் லீக் கோப்பையையும் ரியல் மாட்ரிட் வென்றது. கடந்த 27-ம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில், லிவர்பூலை 3-1 என வீழ்த்தி 3-வது கோப்பையை மாட்ரிட் வென்றது குறிப்பிடத்தக்கது.
#FLASH: Real Madrid coach Zinedine Zidane says, 'will leave club', reports AFP. pic.twitter.com/A3JAwtRrQq
— ANI (@ANI) May 31, 2018
இந்நிலையில், கோப்பையை வென்ற 5-வது நாளே, ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஸிடேன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு மிகவும் பிடித்த அணி இது. ஆனால், மாற்றம் வேண்டும். வெற்றி பாதையை ரியல் மாட்ரிட் தொடர வேண்டும். புதிய பயிற்சியாளர், புதிய யுக்திகள் இனி தேவை என தெரிவித்துள்ளார்.