மும்பை: கோடை விடுமுறையொட்டி 10 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது!
கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ரயில்வேயானது., சத்ரபதி சிவாஜி மகாராஜ் டர்மினஸில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் ஆனது வரும் ஏப்ரல் 24 துவங்கி மே 23 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரயில் எண் 01027 ஆனது வாரம்தோறும் செவ்வாய் அன்று மகாராஸ்டிர மாநிலம் கோலாபூர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டர்மினலில் இருந்து, காலை 6.45 மணியளவில் துவங்கி வாரணாசியை சென்றடையும். அதேப்போல்
ரயில் எண் 01028 ஆனது வாரம்தோறும் புதன் அன்று வாரணாசியில் இருந்து, பிற்பகல் 1.55 மணியளவில் துவங்கி மகாராஸ்டிர மாநிலம் கோலாபூர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டர்மினலில் சென்றடையும்.
இந்த பயணத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் கல்யாண், இகத்புரி, நாசிக் ரோடு, புசவல், கந்த்வா, இடார்ஸி, ஜபல்பூர், கட்னி, சட்னா, மணிக்ர்பூர் மற்றும் சியோக்கி ஜங் ஆகிய இடங்களில் பயணிகளுக்காக நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.