22_வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலக கோப்பை தகுதி சுற்று கிரிக்கெட் போட்டியில் வென்று இடம் பெற்றது. இந்த உலக கோப்பையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
அடுத்த வருடம் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் (ஜூன் 5-ம் தேதி) தென் ஆப்ரிக்காவை எதிர்க்கொள்கிறது இந்தியா.
அதேபோல உலகமே எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆட்டம் ஜூன் 16-ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 26 -ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை குறித்து முழு அட்டவணை வெளியிடப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
The full match schedule for #CWC19 will be officially announced tomorrow!
https://t.co/R4dHfh9id7 pic.twitter.com/ezOyZmbyaj— ICC (@ICC) April 25, 2018