#IPL_2018: அடக்கு முறைக்கு அஞ்சி விளையாட்டை ரசிக்க போறியா..? ஜி.வி.பிரகாஷ் ட்வீட் video!!

அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி, விளையாட்டை ரசிக்கப்போறியா என்று சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகுறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Apr 10, 2018, 09:47 AM IST
#IPL_2018: அடக்கு முறைக்கு அஞ்சி விளையாட்டை ரசிக்க போறியா..? ஜி.வி.பிரகாஷ் ட்வீட் video!! title=

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, போராட்டம் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது, இதனால் தமிழக இளைஞர்களின் போராட்டம் திசை திருப்பப்படும் என ஐ.பி.எல்-க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் விளைவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சேப்பாக்கம் மைதான கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேசியக்கொடிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்துகொள்ளக்கூடாது. செல்போன், பைகள், பட்டாசு, பைனாகுலர், கார் சாவிகள், கண்ணாடி பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை உள்ளே கொண்டுவர அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, யாரையும் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது எனவும் விதிகளை மீறி நடந்து கொண்டாலோ, மைதானத்தில் பொருட்களை வீசினாலோ கைது செய்யப்படுவர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து கிரிக்கெட்டை பார்க்கப் போறியா?, இல்ல நீ நினைக்கும் கருத்தை வெளிப்படையாக, சுதந்திரமாக சொல்ல முடியலன்னு இந்த விளையாட்ட தவிர்க்கப் போறியா? இல்ல தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News