AirIndia விமான ஜன்னல் கண்ணாடி விழுந்ததில் 3 பேர் காயம்!

Air India விமானத்தில் ஜன்னல் கண்ணாடி பயணத்தின் போது திடிரென கீழே விழுந்தத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்!

Last Updated : Apr 22, 2018, 01:07 PM IST
AirIndia விமான ஜன்னல் கண்ணாடி விழுந்ததில் 3 பேர் காயம்! title=

Air India விமானத்தில் ஜன்னல் கண்ணாடி பயணத்தின் போது திடிரென கீழே விழுந்தத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்!

ஏர் இந்தியா விமானான Boeing 787 Dreamliner, நேற்று அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்துக்கொண்டு இருக்கையில் திடீரென அதன் ஜன்னல் கண்ணாடி கீழே விழுந்துள்ளது. இதனால் விமானத்தில் 10 முதல் 15 நிமிடத்திற்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பொருட்களான ஆகஸிஜன் மாஸ்குகளும் சேதமடைந்துள்ளது. அதேவேலையில் விமானத்தில் இருக்கை எண் 12-U ஆனது பலமான சேதத்தினை கண்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து விமானிகள் தரப்பில் தெரிவிக்கையில், இருவருக்கு சிறு காயங்களும் ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Trending News