ட்விட்டரில் குவியும் அஜித் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு பார்வை!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

Last Updated : May 1, 2018, 01:30 PM IST
ட்விட்டரில் குவியும் அஜித் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு பார்வை!!

நடிகர் அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1971-ஆம் வருடம் மே 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அஜித் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் உள்ளனர். 

திரைப்படம் மட்டுமின்றி கார் மற்றும் பைக் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். போர்ப்ஸ் பத்திரிகையில் 2012-ஆம் ஆண்டு 61-ஆவது இடத்தைப் பெற்றார். 

பின்னர் 2014-ஆம் ஆண்டில் 51-ஆவது இடம்பிடித்தார். அதுபோல 2013-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகராகவும் உள்ளார்.

இன்று இவர் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  பாலிவுட் மட்டும் மின்றி கோலிவுட்டிலும் என பல்வேறு தரப்பிலிருந்தும் இவருக்கு எராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

பலரின் ஆசை நாயகனாக வலம் வரும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

More Stories

Trending News