பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் பாலிவுட் நடிகை கத்ரினா! தூதராக நியமனம்!

இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் எஜுகேட் கேர்ள் என்னும் அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப். 

Last Updated : Mar 26, 2018, 04:44 PM IST
பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் பாலிவுட் நடிகை கத்ரினா! தூதராக நியமனம்! title=

இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் எஜுகேட் கேர்ள் என்னும் அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப். 

பாலிவுட்டின் மிகவும் பிரபலமானவர் முன்னணி நடிகையான கத்ரினா கைஃப். இவர் தற்போது இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் எஜுகேட் கேர்ள் என்னும் அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைப்பின் நிறுவனரான சபீனா என்பவர் அவரை நியமித்துள்ளார். 

இது குறித்து  நிறுவனர் சபீனா கூறும்போது:-  அவர் தூதராக நியமிக்கப்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நடிகை கத்ரினா தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்த பணியை முற்றிலும் வேகமாக முன்னெடுத்து செல்வோம்". இந்த பொறுப்புக்கு தகுதியானவர் அவர் ஒருவரே ஆவார். அவருக்கு சட்டமும் தெரியும், பெண் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி குறித்து உலக நாடுகளில் அனைத்திலும் பேசி வருகிறார்.

பெண்களின் கல்வி தூதராக நியமிக்கப்பட்டது குறித்து கத்ரீனா கூறியதாவது;- கிராமப்புற மற்றும் ஆதிவாசி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும், உயர்கல்வி கற்பதிலும் இன்னும் தடைகள் உள்ளது. பள்ளியில் இடைநிற்கும் பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறது.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தரமான கல்வியைப் பெறுவதற்காக உழைக்கவே இந்தப் பணியில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். பெண்களின் கல்வி உரிமைக்காகப் பாடுபடுவேன்' எனவும் கூறியுள்ளார். 

Trending News