7th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி.... தீபாவளிக்கு முன் அதிரடி டிஏ உயர்வு

7th Pay Commission: நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 06:04 AM IST
  • 46 சதவீத அகவிலைப்படி அதிகரிப்பு.
  • இந்த தேதியில் அரசு அறிவிக்கலாம்.
  • DA உயர்வை அரசு எப்படி முடிவு செய்கிறது?
7th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி.... தீபாவளிக்கு முன் அதிரடி டிஏ உயர்வு

7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். தற்போது டிஏ உயர்வு தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது. நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன், ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். ஒரு சாரார் அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கும் என கூறி வந்தாலும், ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது என மற்றொரு சாரார் கூறிவருகிறார்கள். எனினும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன்தான் இதற்கான தெளிவு கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

46 சதவீத அகவிலைப்படி அதிகரிப்பு

தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ-ஐடபிள்யூ) அடிப்படையிலான டிஏ கணக்கீட்டு சூத்திரத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத உயர்வு இருக்கலாம். இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும்.

டிஏ ஹைக்: இந்த தேதியில் அரசு அறிவிக்கலாம்

பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் (Dearness Allowance), ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணமும் (Dearness Relief) வழங்கப்படுகிறது. அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை அதிகரிக்கும். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். கடந்த மார்ச் 2023 இல், அதற்கு முன் 38 சதவிகிதமாக இருந்த டிஏ 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்ந்தது. தற்போதைய பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு, அடுத்த டிஏ உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநிலங்கள் டிஏவை உயர்த்தியுள்ளன

சமீபத்தில், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. அகவிலைப்படியில் பெரும் பரிசு

DA உயர்வை அரசு எப்படி முடிவு செய்கிறது?

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் DA மற்றும் DR உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரு முறை அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியும், ஜனவரி முதம் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த அகவிலைப்படி உயர்வை பெரும்பாலான அரசாங்கங்கள் மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவித்துள்ளன. இந்த முறை இது அக்டோபரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7வது ஊதியக்குழு: அகவிலைப்படி கணக்கிடுவதற்கான சூத்திரம் இதுதான்

7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) படி 2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கீடு சூத்திரத்தை மத்திய அரசு திருத்தியது.

Dearness Allowance Percentage = ((Average of AICPI (base year 2001=100) for last 12 months -115.76)/115.76)x100

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: Dearness Allowance Percentage = ((Average of All India Consumer Price Index (AICPI) (base year 2001=100) for last 3 months -126.33)/126.33)x100

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அதிரடி அகவிலைப்படி உயர்வு, அரியர் தொகையுடன் வரவிருக்கிறது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News