7th Pay Commission: ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அதிரடி அகவிலைப்படி உயர்வு, அரியர் தொகையுடன் வரவிருக்கிறது..!

7th Pay Commission: இந்த ஆண்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பரிசுகளை அரசாங்கம் அறிவிக்கப் போகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 10:50 AM IST
  • அகவிலைப்படி உயர்வு: 1 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்
  • கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
  • பண்டிகை காலத்தில் நல்ல செய்தி.
7th Pay Commission: ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அதிரடி அகவிலைப்படி உயர்வு, அரியர் தொகையுடன் வரவிருக்கிறது..!

7ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான செய்த் உள்ளது. இந்த ஆண்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பரிசுகளை அரசாங்கம் அறிவிக்கப் போகிறது. மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) அரசாங்கம் விரைவில் உயர்த்தப் போகிறது. இது தவிர நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

அகவிலைப்படி உயர்வு: 1 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்

இந்த செய்தி உறுதியான செய்தியாக இருந்தால், சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். அகவிலைப்படி அதிகரிப்பதால் அனைத்து ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் கணிசமான அளவில் உயர்வு இருப்பது நிச்சயம். டிஏ ஹைக் (DA Hike) குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், இந்த அறிவிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் வரக்கூடும் என வெகுவாக நம்பப்படுகின்றது. 

DA Hike: கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

மோடி அரசாங்கம் கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் (Dearness Allowance) மிகப்பெரிய அளவில் அதிகரிப்பை செய்யும். அதன் பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இம்முறையும் டிஏ சுமார் 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஒரு சாரார் டிஏ 3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றே கூறி வருகிறார்கள். அரசாங்க அறிவிப்பு வந்தவுடன்தான் இது குறித்த தெளிவு கிடைக்கும். அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைபப்டி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். தற்போது ஊழியர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க | மொபைல் டவருக்கு TRAI எவ்வளவு பணம் கொடுக்கிறது? ரூ 40 லட்சம் அட்வான்ஸ் 45000 வாடகை?

7th Pay Commission: பண்டிகை காலத்தில் நல்ல செய்தி

பண்டிகைக் காலத்துக்கு முன்பாக, அதாவது நவராத்திரியின் துவக்கத்திற்கு முன்னர் அரசு டிஏ ஹைக் பற்றி அறிவிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை 1 2023 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது. இதன் விகிதங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

DA Arrears: இரண்டாவது நல்ல செய்தி

கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட அச்சாதாரண சூழல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை முடக்கியது. நிலைமை சீரானதும் முடக்கம் நீக்கப்பட்டு, மீண்டும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த காலத்திற்கான அகவிலைபடி அரியர் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதை வழங்கவேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசு தற்போது இதற்கு செவி சாய்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது சார்பாக இன்னு அரசு எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

தற்போது ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கபட்டால், ஜூலை முதலான அதிகரிப்பின் அரியர் தொகையும் சம்பளத்துடன் ஊழியரளுக்கு கிடைக்கும். 

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்

புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640

அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900

புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312

மேலும் படிக்க | அரண்மனையில் வாழும் அனுபவத்தைத் தரும் டிரெயின்! ஆனா டிக்கெட் விலையும் கொஞ்சநஞ்சமில்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News