Bank Holidays in May 2020: மே மாதத்தில் 13 நாட்களுக்கு மூடப்படும்... முழு விவரத்தை அறிக

ஏற்கனவே ஊரடங்கு பிரச்சனை மற்றும் அதற்கு மேல் வங்கிகள் மூடப்பட்டால், உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனால் வங்கிகள் தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்வது நல்லது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2020, 08:50 PM IST
  • பல்வேறு விடுமுறை நாட்கள் காரணமாக வங்கிகள் 13 நாட்களுக்கு மூடப்படும்.
  • மே 1 தொழிலாளர் தினம், இதன் காரணமாக வங்கிகள் மூடப்படும்.
  • இது தவிர, புத்த பூர்ணிமா மற்றும் ஈத் பண்டிகையும் மே மாதத்தில் உள்ளது.
  • சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் தனித்தனியாக உள்ளது.
Bank Holidays in May 2020: மே மாதத்தில் 13 நாட்களுக்கு மூடப்படும்... முழு விவரத்தை அறிக title=

புது தில்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்டுள்ள  ஊரடங்கு உத்தரவு காரணமாக பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மக்களுக்கு தொடர்ந்து சேவை கிடைக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அடுத்த மாதத்தில் வங்கிகள் 13 நாட்கள் செயல்படாது. அதாவது மே மாதத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 

அத்தகைய சூழ்நிலையில், ஏற்கனவே ஊரடங்கு பிரச்சனை மற்றும் அதற்கு மேல் வங்கிகள் மூடப்பட்டால், உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனால் வங்கிகள் தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்வது நல்லது. இதனால் நீங்கள் பின்னர் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. 

வாருங்கள், எந்த காரணங்களுக்காக மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். 

மே 1 தொழிலாளர் தினம், இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படும். மே 3 ஞாயிறு, மே 7 புத்த பூர்ணிமா, மே 8 ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், மே 9 இரண்டாவது சனிக்கிழமை, மே 10 ஞாயிற்றுக்கிழமை, மே 17 ஞாயிற்றுக்கிழமை, இதன் காரணமாக வங்கிகள் மூடப்படும். மேலும், மே 21 ஷாப்-இ-காதர், மே 22 ஜுமத்-உல்-விதா, மே 23 நான்காவது சனிக்கிழமை, மே 24 ஞாயிறு, மே 25 ரமலான், மே 31 ஞாயிற்றுக்கிழமை என இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை.

வங்கி மூடப்பட்ட தேதி மற்றும் காரணம்:

நாள் மாநிலம் விடுமுறை காரணம்
மே 1 அனைத்து மாநிலம் தொழிலாளர் தினமும்
மே 3 அனைத்து மாநிலம் ஞாயிறு
மே 7 பாட்னா, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, இம்பால், பெலாப்பூர், மும்பை, நாக்பூர், பனாஜி, ஹைதராபாத், குவஹாத்தி, சென்னை, பெங்களூரு புத்த பூர்ணிமா புத்த பூர்ணிமா
மே 8 கொல்கத்தா ரவீந்திர நாத் தாகூர் ஜெயந்தி
மே 9 அனைத்து மாநிலங்களும் இரண்டாவது சனிக்கிழமை
மே 10 அனைத்து மாநிலம் ஞாயிறு
மே 17 அனைத்து மாநிலம் ஞாயிறு
மே 21 ஜம்மு, ஸ்ரீநகர் ஷாப்-இ-காதர்
மே 22 ஜம்மு, ஸ்ரீநகர் ஜும்மத்-உல்-விதா
மே 23 அனைத்து மாநிலங்களும் நான்காவது சனிக்கிழமை
மே 24 அனைத்து மாநிலம் ஞாயிறு
மே 25 அனைத்து மாநிலங்களும்  ஈத்-உல்-பித்ர் (ரமலான்)
மே 31 அனைத்து மாநிலம்  ஞாயிறு

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மிகச் சில ஊழியர்கள் மட்டுமே வங்கிகளில் பணிபுரிகின்றனர். பல தனியார் வங்கிகள் தங்கள் வேலை நேரத்தில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. பல தனியார் வங்கிகள் ஊரடங்கு நாட்களில் மதியம் ஒரு மணி வரை செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News