மே மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? முழு விவரம்!

தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2023, 09:17 AM IST
  • தேசிய விடுமுறை நாட்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.
  • ஒவ்வொரு மாதத்திலும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
  • மே தினத்தை முன்னிட்டு மே 1 அன்று அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
மே மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? முழு விவரம்! title=

இந்திய ரிசர்வ் வங்கி வங்கி விடுமுறை நாட்களை தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் என இரண்டு வகைகளாக வகைப்படுத்தியுள்ளது.  தேசிய விடுமுறை நாட்களை பொறுத்தவரையில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற மூன்று விடுமுறை நாட்கள் அடங்கும்.  இந்த நாட்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.  அடுத்ததாக அரசு விடுமுறைகள் மாநில அரசு வங்கி விடுமுறைகள் மற்றும் மத்திய அரசின் வங்கி விடுமுறைகள் என இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசு வங்கி விடுமுறைகளில் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும் மற்றும் மாநில அரசு வங்கி விடுமுறைகளில் குறிப்பிட்ட மாநிலங்களிலுள்ள வங்கிகள் மட்டும் மூடப்பட்டு இருக்கும்.  

மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

இதுதவிர இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும்.  அதுவே ஒரு மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் இருந்தால், ஐந்தாவது சனிக்கிழமை வங்கிகள் செயல்படும்.  தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மே தினத்தை முன்னிட்டு மே 1 அன்று அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாட்களில் வங்கிகள் மட்டும் தான் மூடப்பட்டு இருக்குமே தவிர மற்றபடி வங்கிகள் வழங்கக்கூடிய ஆன்லைன் சேவைகள் அனைத்திலும் எவ்வித தடையும் இருக்காது. 

மே மாத விடுமுறை நாட்கள்:

மே 1 (திங்கட்கிழமை): மே தினம், மகாராஷ்டிரா தினம்

மே 5 (வெள்ளிக்கிழமை): புத்த பூர்ணிமா - டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்

மே 7: ஞாயிறு

மே 9 (செவ்வாய்): ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்

மே 13: இரண்டாவது சனிக்கிழமை

மே 14: ஞாயிறு

மே 16 (செவ்வாய்): மாநில நாள் - சிக்கிம்

மே 21: ஞாயிறு

மே 22 (திங்கட்கிழமை): மகாராணா பிரதாப் ஜெயந்தி - குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்

மே 24 (புதன்கிழமை): காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி - திரிபுரா

மே 27: நான்காவது சனிக்கிழமை

மே 28: ஞாயிறு

மேலும் படிக்க | வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு முன் இந்த விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News