எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அலெர்ட்! ஜூன் 30 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

State Bank of India: லாக்கர் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : May 29, 2023, 06:26 AM IST
  • லாக்கர் விதிகளில் முக்கிய மாற்றம்.
  • வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அலெர்ட்.
  • ஜூன் 30க்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அலெர்ட்! ஜூன் 30 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! title=

State Bank of India: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.  இதுதவிர அரசாங்க வங்கியிலும் கணக்கை தொடங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி உள்ளது, எஸ்பிஐ மற்றும் அரசின் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும்.  நாட்டிலுள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் முக்கியமான விதிகளை அதாவது வங்கி லாக்கர் விதிகளை இப்போது வங்கி மாற்றப் போகிறது.  லாக்கர் தொடர்பான விதிகளை மாற்றுவது குறித்து எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  ஜூன் 30 முதல் வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை ஸ்டேட் வங்கி மாற்றப் போகிறது.  ஜூன் 30, 2023க்குள் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இணையத்தில் உள்ள லாக்கர் வைத்திருப்பவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று வங்கி தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?

கடந்த சில நாட்களாக வங்கி இது தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.  லாக்கர் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில், "அன்புள்ள வாடிக்கையாளரே, திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தின் தீர்வுக்காக உங்கள் கிளையைப் பார்வையிடவும்.  நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், நீங்கள் இன்னும் துணை ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.  எஸ்பிஐ வங்கி மட்டுமின்றி, பாங்க் ஆஃப் பரோடா வங்கியும் குறிப்பிட்ட தேதிக்குள் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி 23, 2023 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி தனது வாடிக்கையாளர்களை மனதில் வைத்து ஒரு சுற்றறிக்கையினை வெளியிடப்பட்டது.  இந்த சுற்றறிக்கையின்படி, அனைத்து வங்கிகளும் லாக்கர் தொடர்பான விதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.  இதனுடன், ஜூன் 30க்குள் 50 சதவீத வாடிக்கையாளர் ஒப்பந்தங்களும், செப்டம்பர் 30-க்குள் 75 சதவீதமும் திருத்தப்பட வேண்டும் என்பதையும் வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  தற்போது திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, தீ, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, வங்கியின் அலட்சியம் அல்லது அதன் ஊழியர்களின் தரப்பில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு வங்கி இழப்பீடு வழங்கும்.  இந்த இழப்பீடு லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்குக்கு சமமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே லாக்கர் தொடர்பாக ரிசர்வ் வங்கி சில புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது, அதன்படி நீண்ட காலமாக திறக்காமல் இருக்கும் லாக்கர்களை உடைத்து திறந்துகொள்ளலாம் என்கிற விருப்பத்தை வழங்கியுள்ளது.  திருட்டு பயத்தின் காரணமாக மக்கள் பலரும் தங்களது வீடுகளில் வைத்திருக்கும் விலையுர்ந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருப்பதற்காக வங்கியின் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறோம்.  வங்கியின் லாக்கரில் நாம் வைக்கக்கூடிய விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.  வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவைக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது, இந்த வாடகை வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும்.  லாக்கருக்கான வாடகையை வங்கிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்கிறது.  வங்கிகளுக்கான லாக்கர் வாடகை பராமரிப்பு கட்டணம் என அனைத்தும் சேர்த்து ரூ.6,000 மேல் வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News