RBI Released Bank Holidays In May 2024 : நாளை முதல் புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்க உள்ளது. இதனிடையே மே மாதம் தொடங்க உள்ள நிலையில் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், உடனடியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை காலண்டரை ஒருமுறை சரிப்பார்த்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
இந்நிலையில் மே தொடங்க நாளை முதல் பிறக்கப்போகிறது தற்போது வருகிற மே மாதம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என்று ஆர்பிஐ (Reserve Bank of India) வெளியிட்ட காலண்டரில் தகவல் வெளியிடப் பட்டுள்ளது எனவே வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனை போன்ற வேலைகளை செய்ய வங்கி விடுமுறைகளை (Bank Holidays) நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே சரிப்பார்க்கலாம்.
மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :
மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா) வங்கி விடுமுறை.
மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.
மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.
மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.
மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.
மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
இந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருந்தாலும், வங்கிகளின் ஏடிஎம்கள் இந்த நாட்களில் பணி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ