வேலைக்கு செல்லும் பலரும், இன்று சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவுகளோடு கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வியாபாரத்தில் முதலீடு செய்கின்றனர். சிலர், குறைந்த முதலீட்டை வைத்தும், சிறியதாக தொழில் தொடங்கி பின்னர் பெரிதாக சம்பாதிக்கின்றனர். அப்படி, குறைந்த முதலீட்டை வைத்தே கை நிறைய லாபம் பார்க்கப்படும் தொழில் என்ன என்பதை பார்க்கலாமா?
வாழைப்பழ சிப்ஸ்:
இதனை நேந்திரங்காய் சிப்ஸ் என்றும் கூறுவர். இந்த சிப்ஸ், கேரளாவில் அதிகமாக கிடைக்கும். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், இந்த சிப்ஸ் நிறையவே கிடைக்கும். தென்னிந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் உணவுகளுள் ஒன்று, நேந்திரங்காய் சிப்ஸ். இதற்கு, தமிழகத்தை பொருத்தவரை நல்ல பிசினஸ் உள்ளது. அதனால், இதனை சிறு தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். இதை தொடங்குவது எப்படி? இதோ வழிமுறைகள்!
தேவைப்படும் பொருட்கள்..
வாழைப்பழ சிப்ஸ்களை தயாரிக்க, பல வகையான இயந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இதற்கு தேவைப்படும் உணவு பொருட்கள் வாழைப்பழம் அல்லது நேந்திரங்காய், உப்பு, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள் ஆகியவைதான். வாழைப்பழங்கள உரித்து, அதனை மெல்லிய துண்டுகளாக வெட்டுவதற்கு ஒரு இயந்திரம் தேவைப்படும். அது தானியங்கியாகவும் இருக்கலாம், அல்லது கையிலேயே சீவக்கூடிய துருவல் இயந்திரம் போன்ற பொருளாகவும் இருக்கலாம்.
வாழைப்பழங்களை கழுவுவதற்கு, தண்ணீர் தொட்டி அல்லது டப் தேவைப்படும். இது தவிர, கடாய், அடுப்பு ஆகியவையும் முக்கியம். சிப்ஸ் செய்து போட்டு முடித்த பிறகு அந்த பையை காற்று புகாமல் ஒட்டுவதற்கும் ஒரு இயந்திரம் தேவை. இந்த இயந்திரங்களின் விலை சுமார் 30 ஆயிரத்தில் ஆரம்பித்து, 50 ஆயிரம் அரை செல்லலாம். வாழைப்பழ சிப்ஸ் செய்வதற்கு சுமார் 6000 சதுர அடி கொண்ட இடம் அல்லது அறை தேவைப்படலாம்.
எவ்வளவு செலவாகும்?
உதாரணத்திற்கு, 100 கிலோ வாழைப்பழ சிப்ஸ் செய்வதற்கு சுமார் 240 கிலோ வாழைப்பழங்கள் தேவைப்படலாம். இதனை மொத்தமாக வாங்குவதற்கு, ரூ.2000 வரை செலவாகலாம். இதனை பொறித்தெடுக்க, 25 முதல் 30 லிட்டர் வரை எண்ணெய் தேவைப்படும். எண்ணெய், லிட்டருக்க் 80 ரூபாய் வரை ஆகலாம். மொத்த எண்ணெய்க்கு, 2,400 ரூபாய் வரை செலவாகும். இதை உருவாக்கும் அடுப்பு, டீசலில் இயங்கும். இந்த அடுப்பிற்கு, 1 மணி நேரத்திர்கு 10 லிட்டர் டீசல் வரை செலவாகலாம். மொத்தமாக இதற்கு 22 லிட்டர் டீசல் வரை தேவைப்படலாம். ஒரு லிட்டர் டீசர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, 22 லிட்டர் 1700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது தவிர, மசாலா பொருட்களுக்கு 500 ரூபாய் வரை செலவாகலாம்.
கிடைக்கும் லாபம் எவ்வளவு?
ஒரு கிலோ வாழைப்பழ சிப்ஸ் செய்ய, சுமார் ரூ70 ஆகலாம். இதை கணக்கு வைத்து, ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் லாபம் என வைத்து இந்த சிப்ஸினை விற்பனை செய்யலாம். இதனால், ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் வியாபாரம் செய்தால், 10000 ரூபாய்க்கு வியாபாரம் செய்யலாம். இதில், ஒரு நாளைக்கு 5000 வரை கையில் லாபம் தங்கும். இதனை நேரடியாக விற்பனை செய்வதை விட மளிகை கடைகள் அல்லது பேக்கரி கடைகளுடன் வணிகம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ