அக்டோபர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அக்டோபர் 1 முதல், அரசால் மாற்றப்பட்ட பல விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இது சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், அனைவரும் இந்த மாற்றங்களை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
டிமேட் கணக்குகளில் இரண்டு காரணி அங்கீகாரம் (டூ ஃபாக்டர் அதண்டிகேஷன்), அடல் பென்ஷன் திட்டம், மியூச்சுவல் ஃபண்டுகளில் நியமனம், கார்டு டோக்கனைசேஷன் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி ஆகியவை அக்டோபர் மாதம் அமலுக்கு வரவுள்ள மாற்றங்களில் அடங்கும். இந்த மாற்றங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
டிமேட் கணக்கில் இரண்டு காரணி அங்கீகாரம் (டூ ஃபாக்டர் அதண்டிகேஷன்)
செப்டம்பர் 30, 2022-க்குள் டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இரு காரணி அங்கீகாரத்தை செய்து முடிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், கடைசி தேதிக்கு முன் இரண்டு காரணி அங்கீகாரத்தைச் செய்யவில்லை என்றால், அக்டோபர் 1 முதல் தங்கள் கணக்கில் லாக்-இன் செய்ய முடியாது.
மியூச்சுவல் ஃபண்டில் நாமினேஷன்
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதியின்படி, இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அக்டோபர் 1, 2022 முதல் நாமினேஷன் விவரங்களை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்/அவள் நாமினேஷன் செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடும் ஒரு படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களில், முதலீட்டாளர்கள் நாமினேஷனை செய்வதற்கு ஃபிசிக்கல் மற்றும் டிஜிட்டல் என ஆப்ஷன்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஃபிசிக்கலாக இதை செய்யும்போது முதலீட்டாளர்கள் படிவத்தை நிரப்பி கையொப்பமிட வேண்டும். அதே நேரத்தில் டிஜிட்டல் முதலீட்டாளர்கள் மின்-கையொப்பமிட வேண்டும்.
வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா தொடர்பான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, இப்போது நாட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்ய முடியாது. இந்த விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக, 18 முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு சாதாரண குடிமகனும் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யலாம் என இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கத்தால் மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
டோக்கனைசேஷன் முறை செயல்படுத்தப்பட்டது
அக்டோபர் 1, 2022 முதல் நாட்டில் டோக்கனைசேஷன் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குப் பிறகு, எந்த ஒரு ஈ-காமர்ஸ் அல்லது பேமெண்ட் கேட்வேவும், உங்கள் அட்டைத் தகவலைச் சேமிக்க முடியாது. இது வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் அபாயத்தையும் குறைக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி
நாட்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஏனென்றால், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், 30 செப்டம்பர் 2022 அன்று, வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு பெரிய முடிவு எடுக்கப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ