வாழ்க்கையில் பணக்காரர் ஆவது எப்படி என்பதை வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் என இருவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளலாம். வெற்றி பெற்றவர் வெற்றிக்கான வழியை கொடுப்பார், தோல்வியடைந்தவர் எதை செய்யக்கூடாது என்பதை கற்பிப்பார். இரண்டுமே வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்களுக்கு அவசியம். அந்த வகையில் வெற்றி பெற்ற பில்கேட்ஸ் பணம் சம்பாதிக்க கூறும் டிப்ஸ் என்னவென்பதை பார்ப்போம்
வெற்றி பெற முடியும்
பில்கேட்ஸ் பொறுத்தவரையில், இங்கே எல்லோராலும் வெற்றி பெற முடியும் என கூறுகிறார். ஏழையாக பிறந்தது உங்களுடைய தவறு அல்ல. ஏழையாகவே இறப்பது உங்களுடைய தவறு. பணம் சம்பாதிக்க கோடி வழிகள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேர்ந்தெடுப்பது, மக்களுக்கு கொடுப்பதில் தான் உங்களுடைய வெற்றி இருக்கிறது என்கிறார். எல்லோருக்கும் எல்லாம் தேவை. ஆனால், அந்த தேவையை நீங்கள் எப்படி பூர்த்தி செய்கிறீர்கள் என்பதில் தான் உங்களுடைய வெற்றி இருக்கிறது என கூறுகிறார் பில்கேட்ஸ்.
மேலும் படிக்க | Gold Loan: புதிய நகைகளை அடமானம் வைக்கும் முன்பு இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
நேர்மறை எண்ணங்கள்
ஒருவர் வாழ்கையில் வெற்றி பெற நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். நேர்மறையாக சிந்திக்கும் நபர்கள் உங்களுடன் இருந்தால், நீங்களும் நேர்மறையாகவே சிந்திப்பீர்கள். உங்கள் எண்ணம், செயல்பாடு அனைத்தும் எது தேவை என்பதில் மட்டும் இருக்கும். அதனால் இலக்கை நீங்கள் எளிமையாக அடைவீர்கள். அந்த பயணம் நிச்சயம் வெற்றிக்கான பாதையில் மட்டுமே இருக்கும். நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களை மேலே உயர்த்தும் என கூறுகிறார் பில்கேட்ஸ்
ரிஸ்க் எடுக்க தயங்க வேண்டாம்
சில பெரிய விஷயங்களை செய்ய அசாத்திய ரிஸ்க் எடுக்க வேண்டும் என கூறுகிறார் பில்கேட்ஸ். யாரொருவர் மிகப்பெரிய ரிஸ்க்குக்கு தயாராக இருக்கிறாரோ, அவர் நிச்சயம் பெரிய வெற்றிகளை பெறுவார். அதேநேரத்தில் நேரம், காலம் சூழல் என்பதை அறிந்து உங்களுடைய முயற்சி இருக்க வேண்டும். ரிஸ்க் முழுவதும் உங்களை நம்பியதாக இருக்க வேண்டும். மற்றொருவரை நம்பியதாக இருக்கக்கூடாது. இது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என்கிறார் பில்கேட்ஸ். மிகப்பெரிய உயரத்துக்கும் செல்வீர்கள் என்பதை உறுதியாக கூறுகிறார்.
ஸ்மார்ட் சிந்தனை
எந்தவொரு வேலையை செய்யவும் ஸ்மார்டாக சிந்தக்க வேண்டும் என கூறுகிறார் பில்கேட்ஸ். அதில் சோம்பேறிகள் சிறந்தவர்கள் என்கிறார். ஏனென்றால் சோம்பேறிகள் ஒரு கடினமான வேலையை எளிதாக செய்யும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என கூறும் அவர், நீங்கள் எந்தவொரு வேலையையும் கடினமாக செய்யாமல் ஸ்மார்டாக யோசித்து செய்தால் வெற்றி பெறுவீர்கள் என கூறுகிறார்.
வெற்றி என்ன கொடுக்கும்?
வெற்றி என்பது ஒரு பயனற்ற ஆசிரியர் என கூறும் பில்கேட்ஸ், அதனை கொண்டாடுவதில் தவறு இல்லை என தெரிவிக்கிறார். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து கிடைக்கும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. அந்த பாடங்களே உங்களை வாழ்க்கையின் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்கிறார் பில்கேட்ஸ். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், அந்த சூழலில் நிதானத்தை இழக்காமல் இருப்பதும் சிறந்த ஆளுமை என்கிறார். அவர்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கொடி நாட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | SSY Scheme: பெண் குழந்தைக்கு 21 வயதாகும் போது ரூ. 63 லட்சம் தரும் பம்பர் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ