Insurance: 1 ரூபாய் செலவில்லாம கிடைக்கும் காப்பீடு! LPGக்கு ரூ 50 லட்சம் இன்சூரன்ஸ்

LPG & Insurance: எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன், 50 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும், ஒரு ரூபாய் செலவில்லாமல் விபத்துக் காப்பீடு கிடைக்கும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2024, 08:45 AM IST
  • செலவில்லாமல் கிடைக்கும் விபத்துக் காப்பீடு
  • இலவச காப்பீட்டு பாலிசி
  • இலவச விபத்துக் காப்பீடு
Insurance: 1 ரூபாய் செலவில்லாம கிடைக்கும் காப்பீடு! LPGக்கு ரூ 50 லட்சம் இன்சூரன்ஸ் title=

Free Insurance: நமது வீடுகளில் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த சிலிண்டருக்கு அரசிடமிருந்து ரூ. 50 லட்சம் காப்பீடு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரை எரிவாயு சிலிண்டர் காப்பீடு வழங்குகிறது. நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன், உங்கள் குடும்பத்திற்கு இந்தக் காப்பீடு கிடைக்கும். மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த காப்பீட்டிற்கு உங்கள் கையில் இருந்து ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை என்பது தான்.

எண்ணெய் நிறுவனங்களின் இலவச காப்பீடு
நாட்டின் அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரை எரிவாயு சிலிண்டர் காப்பீடு வழங்குகிறது. நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன், உங்கள் குடும்பத்திற்கு இந்தக் காப்பீடு கிடைக்கும். இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

எல்பிஜி சிலிண்டர் எரியக்கூடியது, இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்படும் செய்திகளைப் பார்க்கிறோம். இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்களுக்காக இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.

எதிர்பாராத விபத்து

எதிர்பாராத கேஸ் சிலிண்டர் விபத்துகளுக்குப் பிறகு, தங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய நுகர்வோருக்கு உரிமை உண்டு. வாடிக்கையாளர், தனது குடும்பத்திற்காக பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்சம் வரை உரிமை கோரலாம்.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஜாக்பாட் பரிசு.. இனி வெறும் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும்
 
எல்பிஜி காப்பீட்டின் நிபந்தனைகள்

>> எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் ஒருவருக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்குகிறது.
>> இது தவிர, முழு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை பெறலாம்
>> சொத்துக்கு மட்டும் சேதம் ஏற்பட்டால், ரூ.2 லட்சம் க்ளைம் கிடைக்கும்.
>> சமையல் எரிவாயு வெடிப்பு விபத்தில் ஒருவர் இறந்தால், ரூ.6 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடுகிடைக்கும்.
>> சமையக்ல் எரிவாயு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ஒருவருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். சிகிச்சைக்கான காப்பீடு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் காலாவதி நாள்

சிலிண்டரை பெறும்போது, ​​அதன் காலாவதி நாளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். சிலிண்டரின் காலாவதி தேதி சிலிண்டரின் மேல் பகுதியில் உள்ள மூன்று அகலமான கீற்றுகளில் குறியீடு வடிவில் எழுதப்பட்டுள்ளது. இந்த குறியீடு A-24, B-25, C-26 அல்லது D-27 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏபிசிடி குறியீடு

இந்தக் குறியீட்டில் ABCD என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வோம். A என்றால் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச், B என்றால் ஏப்ரல், மே மற்றும் ஜூன், C என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் D என்றால் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர். உதாரணமாக உங்கள் சிலிண்டரில் A-24 என்ற குறியீடு இருந்தால் ஜனவரி முதல் மார்ச் 2024 வரை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | ஜனவரி 1ஆம் தேதி முதல்... ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News