Budget 2024: பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் முன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வராமல் பலர் ஏமாற்றத்திலும் உள்ளனர். இதில் வீட்டை வாடகைக்கு விட்டிருப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தங்கள் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு (House Owners) பட்ஜெட்டில் புதிய விதி அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்து அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாடகைக்கு வீட்டை விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு பட்ஜெட்டில் வந்துள்ள ஒரு முக்கியமான விதி என்னவென்றால், இப்போது வருமான வரி தாக்கல் செய்யும் போது, வீடு அல்லது பிளாட் வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தை, ஹவுசிங் பிராபர்டி (வீடு அல்லது பிளாட் மூலம் வரும் வருமானம்) மூலம் வரும் வருமானமாக காட்ட வேண்டும். இப்போது அதை வணிக வருமானமாக காட்ட முடியாது.
Union Budget 2024:
நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Act) முக்கிய திருத்தம் ஒன்றை பற்றி குறிப்பிட்டார். அதில், வீட்டுச் சொத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்துக்குப் பதிலாக, வீட்டுச் சொத்தின் கீழ் வரும் வருமானமாக காட்டப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தவறான வருமானத்தைக் காட்டி வரியைச் சேமிக்க முடியாது
தற்போது, வரி செலுத்துவோர் (Taxpayers), வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தை குறைத்துக் காட்ட, அதை வணிகம் அல்லது தொழிலில் இருந்து வரும் லாபமாகக் காட்டுகிறார்கள். இதன் காரணமாக அவர்களது வரி பொறுப்புகள் குறைந்து வருவதாக நிதியமைச்சர் கூறினார். இந்த ஏற்பாட்டில் சில சொத்து உரிமையாளர்கள் வாடகை வீட்டின் மூலம் வரும் வருமானத்தை வணிக வருமானமாகக் காட்ட அனுமதி அளிக்கப்படுகின்றது.இதன் மூலம் பராமரிப்பு செலவுகள், பழுதுபார்ப்பு மற்றும் தேய்மானம் போன்ற விலக்குகளைக் கோர முடியும். இந்த வழியில், வருமானத்தை தவறாகக் காட்டி, வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குரிய வருமானத்தை கணிசமாகக் குறைக்கிறார்கள். இதனால் அவர்கள் செலுத்த வெண்டிய வரி மிகவும் குறைகிறது.
வீட்டில் இருந்து வரும் வருமானம் இனி வணிக வருமானமாக கருதப்படாது
வீட்டு உரிமையாளர்கள் மூலம் வரி பொறுப்பு இந்த வழியில் குறைக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசு 28வது பிரிவில் திருத்தம் செய்யும் என நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இந்த திருத்தத்திற்குப் பிறகு, செலுத்துவோர் வாடகை வருமானத்தை வணிக வருமானமாக காட்ட முடியாது. வணிகம் அல்லது தொழில் மற்றும் வீட்டுச் சொத்து ஆகியவை வருமானத் தலைப்பின் கீழ் செலுத்தப்படும். இந்த புதிய விதியால், இவர்களின் வரிப் பொறுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த திருத்தம் எப்போது அமலுக்கு வரும்?
இந்த திருத்தம் அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், அதாவது, ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய விதி வருமான வரி செலுத்துவோர் வருமானத்தை தவறான முறையில் காட்டி குறைவான வரி செலுத்துவதை தடுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ