பல சமயங்களில், நம்மை அறியாமல் மருந்துகளுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். ஆரோக்கிய உணவு தானே என நினைத்து, நாம் மருத்து சாப்பிடும் போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள், ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அதோடு, மருந்துகளின் செயல்திறனும் பாதிக்கும்.
மாத்திரை மருந்துடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள்
ஆரோக்கியமாக இருக்க, தனது உணவில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உணவு விதிகள் பற்றிய சரியான புரிதல் இல்லாததால், அவை ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, தீங்கு விளவிவிக்கும். இதேபோன்ற உணவு விதி மருந்துகளுக்கும் பொருந்தும். அந்த வகையில், மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை (Health Alert) என்பதை தெரிந்து கொள்வோம்.
பால்
நீங்களும் பால் அல்லது ஏதேனும் ஜூஸுடன் மருந்து சாப்பிட விரும்பினால், உங்கள் பழக்கத்தை இன்றே மாற்றவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு மருந்தின் செயல் திறனும் பாதிக்கும்.
காபி
மருந்துகளுடன் காபி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபியில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள் மருந்தின் செயல்திறனை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
திராட்சை சாறு
திராட்சை ஜூஸை எந்த மருந்திலும் சேர்த்து தவறுதலாகக் கூட குடிக்கக் கூடாது. ஆண்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பல வித நோய்களுக்கான மருந்துகளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்ற பழச்சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் குறையும் என்று ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. திராட்சை சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ப்ரோக்கோலி
இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது வைட்டமின் கே அதிகம் உள்ள காய்கறிகளான ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் கீரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வைட்டமின் கே இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிகப்படியான வைட்டமின் கே உட்கொள்வது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும்.
குருதிநெல்லி சாறு
குருதிநெல்லி சாறு சில மருந்துகளின் செயல் திறனை குறைக்கலாம். நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், குருதிநெல்லி சாறு குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும்.
குளிர்ந்த நீர்
குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதையும் நிச்சயம் தவிர்க்கவும். மருந்தை எப்போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை தண்ணீருடன் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாக கரையாது. ஆனால் அதிக தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவை எளிதில் கரையும்.
மது பானம்
உணவு மட்டுமல்ல, சில மதுபானங்களையும் தவிர்க்க வேண்டும். ஒயினில் உள்ள ஆல்கஹால் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் வினைபுரியும். இதனால் வயிற்று வலி, வாந்தி, வியர்வை, தலைவலி மற்றும் இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ