NSC, FD முதலீட்டை விட அதிக வட்டி தரும் RBI சேமிப்பு பத்திரம்... முழு விபரம் இதோ..!

RBI Floating Rate Savings Bonds: வங்கி FD மற்றும் NSC என்னும் தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுக்கும் ரிசர் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்பு பத்திர முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2024, 06:17 PM IST
  • ரிசர்வ வங்கியின் மிதவை வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள் மீதான முதலீடு.
  • ஆர்பிஐ சேமிப்பு பத்திரங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழை விட கூடுதாக 35 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி கிடைக்கும்.
  • ஆர்பிஐ பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூபாய் ஆயிரம்.
NSC, FD முதலீட்டை விட அதிக வட்டி தரும் RBI சேமிப்பு பத்திரம்... முழு விபரம் இதோ..! title=

RBI Floating Rate Savings Bonds: பணத்தை சேமிக்கும் போது, பாதுகாப்புடன் நல்ல வருமானத்தை கொடுக்கும் திட்டம் என்று வரும்போது, பலருக்கும் மனதில் தோன்றுவது நிலையான வைப்புத் திட்டம் அல்லது தேசிய சேமிப்பு சான்றிதழ். தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது நிலையான வருமானத்தை கொடுக்கும் ஒரு முதலீட்டு திட்டம். இதை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் எளிதாக திறக்கலாம். நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் முதலீடு செய்வது இதில் தான். இதற்கு வருமான வரி பிரிவு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வங்கி FD மற்றும் NSC என்னும் தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுக்கும் ரிசர் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்பு பத்திர முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும்.

ரிசர்வ வங்கியின் மிதக்கும் விகித சேமிப்பு பத்திரங்கள்

முதலீட்டாளர்களுக்கு, சிறந்த வட்டி விகிதங்களுடன், பாதுகாப்பான, பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சேமிப்பு திட்டத்தில் (Investment Tips) ஒன்று தான் ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்பு பத்திரங்கள். இது நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் மற்ற அரசு பத்திரங்களைப் போல அல்லாமல், இதன் வட்டி விகிதம் அதன் முதிர்வு காலத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை. இதன் வட்டி விகிதம் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 35 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் அதிகம் இருக்கும்.

ஆர்பிஐ பத்திரத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்

இந்திய குடிமக்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் இந்த ரிசர்வ் வங்கியின் மிதக்கும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மைனர் குழந்தைகளின் பெயரில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். வெளிநாடு இந்தியர்கள் வீடு செய்ய இயலாது. இந்த பத்திரத்தின் மீதான வட்டி மற்றும் முதிர்வு பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் வகையில், முதலீட்டாளருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. 5 லட்சம் இலவசம், முதல்வர் அறிவிப்பு

ஆர்பிஐ மிதவை வட்டி சேமிப்பு பத்திரங்களின் சிறப்பு அம்சங்கள்

வட்டி விகிதம்

ஆர்பிஐ சேமிப்பு பத்திரங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழை விட கூடுதாக 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் கொடுக்கப்படும். பண வீக்கம் மற்றும் சந்தை நிலையை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதன் வட்டி விகிதம் திருத்தி அமைக்கப்படும். எனவே சந்தை விகிதம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் அதிக வட்டி விகிதத்தை பெறுவார்கள்.

முதிர்வு காலம்

ரிசர்வ் வங்கியின் மிதவை வட்டி சேமிப்பு பத்திரங்களும் முதிர்வு காலம், பத்திரம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு வருடங்கள் என கணக்கிடப்படும். முதிர்வு காலத்திற்குப் பிறகு வட்டி கிடைக்காது. முதலீட்டு பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே எடுக்கும் வசதி உண்டு. மூத்த குடிமக்கள், ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு ஏற்ப, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மூத்த குடிமக்களில், 60 வயது முதல் 70 வயதானவர்களுக்கான லாக்இன் காலம் ஆறு ஆண்டுகள், 70 முதல் 80 வயதானவர்களுக்கு லாக்இன் காலம் ஐந்து ஆண்டுகள். 80 வயதிற்கு மேலானவர்களுக்கு லாக்இன் காலம் நான்கு ஆண்டுகள்.

முதலீட்டு தொகை

ஆர்பிஐ பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு ரூபாய் ஆயிரம். அதிகபட்ச அளவிற்கு வரம்பு ஏதும் இல்லை.

வரி விலக்கு பலன்கள்

ரிசர்வ் வங்கியின் மிதவை வட்டி சேமிப்பு பத்திரங்கள் மீதான வருமானத்திற்கு வரி விதிக்கப்படும். வட்டி செலுத்தப்படும் போதே, அப்போது இருக்கும் வருமான வரி விதிகளின் படி, மூலத்திலேயே வரி கழிக்கப்படும். எனினும் சொத்து வரி சட்டத்தின் கீழ் 1957 ஆண்டின் சொத்து வரி சட்டத்தின் கீழ், சொத்துவரி விலக்கு உண்டு.

மேலும் படிக்க | PM விஸ்வகர்மா திட்டம்... 5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... ₹500 உதவித்தொகை.. பலன் பெறுவது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News