EPF Retirement Corpus Calculator: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனியார் துறை ஊழியர்களுக்காக, ஓழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை நடத்துகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) ஓய்வூதிய கார்பஸை உருவாக்க தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) மாதாந்திர பங்களிப்புகளைச் செய்கிறார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. இதில் செய்யப்படும் தொகை, வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை.
தற்போது இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) 8.25 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது. ஒரு ஊழியர் சில தசாப்தங்களுக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்தால், அவரது சிறிய மாதாந்திர பங்களிப்பும் ஒரு பெரிய கார்ப்பஸை உருவாக்க உதவும். இபிஎஃப் திட்டத்தின் சிறப்பம்சம் என்ன? இதன் மூலம் பெரிய கார்பசை எப்படி உருவாக்குவது? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
25 வயதில் ஒருவர் இபிஎஃப் கனக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்க்கத் தொடங்கி, மாதா மாதம் ரூ.4000, ரூ.8,000 அல்லது ரூ.12,000 பங்களிப்பு செய்தால், அவருடைய ஓய்வூதியக் கார்பஸ் எவ்வளவு இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
EPF: முக்கிய அம்சங்கள் என்ன?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF திட்டத்தை இயக்குகிறது. இத்திட்டத்திந் கீழ், குறைந்தபட்சம் ரூ. 15,000 மாத அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் EPF கணக்கைத் தொடங்கலாம். இதில் அவர்கள், குறைந்தபட்ச பங்காக ரூ.1,800 செலுத்த வேண்டும். அதிகபட்ச EPF பங்களிப்பு EPF கணக்கு வைத்திருப்பவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 12 சதவீதம் ஆகும்.
Monthly EPF Contributions: நிறுவனம் எவ்வளவு பங்களிக்கிறது?
பணியாளர்கள் பங்களிக்கும் அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. எனினும், நிறுவனத்தின் முழு பங்களிப்பும் EPF க்கு செல்லாது. நிறுவனத்தின் மொத்த பங்களிப்பான 12 சதவீதத்தில், 3.67 சதவீதம் ஊழியரின் EPF கணக்கிற்குச் செல்கிறது, மீதமுள்ள, 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு (EPS) செல்கிறது.
EPF தொகையை எப்போது எடுக்க முடியும்?
ஒரு ஊழியர் ஓய்வு பெற்றால் (அல்லது 58 வயதிற்குள்), 10 வருட சேவையை முடித்த பிறகு, 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் அல்லது குறிப்பிட்ட ஓய்வூதிய வயதிற்கு முன் இறந்தால், பிஎஃப் உறுப்பினர்கள் EPF தொகையை திரும்பப் பெறலாம்.
இபிஎஃப் கணக்கீடு
சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். EPF கார்பஸை 35 ஆண்டுகளுக்கு கணக்கிடுவோம். 25 வயதில் ஒரு ஊழியர் பிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார் என்றும், அவர் 60 வயது வரை அதில் பங்களிக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம்.
EPF Interest Calculator: ரூ. 4,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு?
மாதா மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.16,80,000 ஆக இருக்கும்.
இபிஎஃப் வட்டி கால்குலேட்டர்: ரூ.4,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் எவ்வளவு இருக்கும்?
4,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ 94,67,170.51 ஆக இருக்கும்.
EPF Interest Calculator: ரூ. 8,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு?
மாதா மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.33,60,000 ஆக இருக்கும்.
இபிஎஃப் வட்டி கால்குலேட்டர்: ரூ.8,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் எவ்வளவு இருக்கும்?
8,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,89,34,341.01 ஆக இருக்கும்.
EPF Interest Calculator: ரூ. 12,000 மாதாந்திர EPF பங்களிப்புக்கான மொத்த முதலீடு எவ்வளவு?
மாதா மாதம் ரூ.12,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.50,40,000. ஆக இருக்கும்.
இபிஎஃப் வட்டி கால்குலேட்டர்: ரூ.12,000 மாதாந்திர பங்களிப்பில் மதிப்பிடப்பட்ட கார்பஸ் எவ்வளவு இருக்கும்?
12,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.2,84,01,511.52 ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் முதலீட்டு ஆலோசனை அல்ல. இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ