EPFO Update: ஊழியர்கள் ஓய்வுக்கு முன்னரே 100% பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

EPFO Withdrawal: ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பணி ஓய்விற்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அதற்கு முன்னும் தொகையை எடுக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 04:07 PM IST
  • பிஎஃப் பணத்தை எப்போது, ​​எந்த சூழ்நிலையில் எடுக்கலாம்?
  • எந்தெந்த காரணங்களுக்காக EPF இலிருந்து பணத்தை எடுக்கலாம்?
  • அவசர காலங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
EPFO Update: ஊழியர்கள் ஓய்வுக்கு முன்னரே 100% பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

EPFO Withdrawal: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. இது தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. EPFO விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாளியும் / நிர்வாகமும் EPF -க்கு அதே அளவு  தொகையை வழங்குகிறார்கள். முதலாளி / நிர்வாகத்தின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கிற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

EPFO ​​ஊழியர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நோக்கம் ஊழியர்களின் பணத்தை சேகரிப்பதாகும். தேவையின் போதும், சரியான நேரம் வரும்போதும் ஊழியர்கள் இதை எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம், அல்லது மற்ற இடங்களில் டெபாசிட் செய்யலாம். ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு PF பணத்தை எடுக்க நினைத்தால், அதற்கான வழிகளையும் விதிகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

ஓய்வுக்கு முன் பிஎஃப் பணம்

ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பணி ஓய்விற்கு பிறகுதான் எடுக்க வேண்டும் என்றில்லை. அதற்கு முன்னும் தொகையை எடுக்கலாம். ஓய்வு பெறுவதற்கு இன்னும் பல வருடங்கள் உள்ள நிலையில் உங்களுக்கு பணத் தேவை அதிகமாக இருந்து, ஊழியர்கள் PF பணத்தை எடுக்க நினைத்தால், சற்றும் யோசிக்காமல், தாமதிக்காமல், சுலபமாக பணத்தை எடுக்கலாம். இந்த பணத்தை எடுத்து மற்ற இடங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு நீங்கள் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும், சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கான அந்த முக்கிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிஎஃப் பணத்தை எப்போது, ​​எந்த சூழ்நிலையில் எடுக்கலாம்?  (How To Withdraw PF Amount)

முதலில், பிஎஃப் பணத்தை எப்போது, ​​எந்த சூழ்நிலையில் எடுக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது பற்றிய புரிதல் இருப்பதும் அவசியமாகும். ஊழியர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றால் அவசர காலங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இது தவிர, பின்வரும் சூழ்நிலைகளில் EPFO ​​இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் நீங்கள் திரும்பப் பெறலாம் (Withdraw).

மேலும் படிக்க | Business Idea: லட்சத்தில் வருமானத்தை அள்ளி தரும் ‘கார்ன் பிளேக்ஸ் ’ பிசினஸ் !

வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால்: 

சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பிஎஃப் தொகையை எடுக்கலாம். இதை நல்ல லாபம் வரும் இடத்தில் மிதலீடு செய்யலாம். எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது  பல ஊழியர்களுக்கு உள்ள கேள்வியாக உள்ளது? உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். மேலும், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம். இந்த தொகையை நீங்கள் உங்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

எந்தெந்த காரணங்களுக்காக EPF இலிருந்து பணத்தை எடுக்கலாம்?

இபிஎஃப்ஓ (EPFO) ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இபிஎஃப் -இலிருந்து பணத்தை எடுக்கலாம். அதில் அவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்கள் எளிதாக PF பணத்தை எடுத்து குழந்தைகளின் கல்விக்கு தேவையான தொகையை முதலீடு செய்யலாம். மேலும், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டாலும், எளிதாக PF-ல் இருந்து பணத்தை எடுத்து அவர்களின் திருமணத்திற்கு செலவிடலாம். இது தவிர வீடு கட்டவும், புதுப்பிக்கவும் பிஎஃப் கணக்கிலிருந்து ஊழியர்கள் பணத்தை எடுக்க முடியும். 

மேலும் படிக்க | 7th Pay Commission ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிஏ ஹைக்... முக்கிய அறிவிப்பு இன்று!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News