Corn Flakes Business: குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில், தொழில் குறித்து பேசுகையில், பட்டாணியை பதப்படுத்தும் தொழில் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கத் தயாராக இருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு வணிக யோசனையை வழங்குகிறோம். இதில் தினமும் குறைந்தபட்சம் ரூ.4,000 எளிதாக சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலில் தனிப் பயிற்சி எடுக்கத் தேவையில்லை என்பது இதன் மிகப்பெரிய சிறப்பு அம்சம். இந்த வணிகம் கார்ன் ஃப்ளேக்ஸ் பிசினஸ். இந்தத் தொழிலின் மூலம் ஒரு மாதத்திற்குள் கோடீஸ்வரராகலாம். சோளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் கார்ன் ஃபிளேக்குகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்தானது என்பதாலும் தயார் செய்ய அதிக சிரமம் இல்லை என்பதாலும் பலரது வீடுகளில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிலைத் தொடங்க (Business Idea) , உங்களுக்கு யூனிட் ஒன்றை அமைக்கக்கூடிய நிலம் இருக்க வேண்டும். இது தவிர தயாரிக்கப்பட்ட கார்ன் பிளேக்ஸை சேமிப்பிற்கு இடமும் தேவை. உங்களுக்கு ஒரு கிடங்கும் தேவைப்படும். உங்களிடம் மொத்தம் 2000 முதல் 3000 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
கார்ன் ஃப்ளேக்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்
கார்ன் ஃப்ளேக்ஸ் தொழிலுக்குத் தேவையான உபகரணங்களைப் பற்றி பேசினால், உங்களுக்கு இயந்திரங்கள், மின்சார வசதி, ஜிஎஸ்டி எண், மூலப் பொருட்கள், இருப்பு வைக்க இடம் மற்றும் கிடங்கு ஆகியவை தேவைப்படும். இந்தத் தொழிலில் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் கார்ன் ஃப்ளேக்ஸ் தயாரிப்பதற்கு மட்டுமல்ல, கோதுமை மற்றும் அரிசி பிளேக்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மக்காச்சோள உற்பத்தி அதிகமாக உள்ள பகுதியில் உங்கள் தொழிலை அமைக்க வேண்டும். வெகுதூரத்தில் இருந்து மக்காச்சோளத்தை கொண்டு வந்து அதில் கார்ன் பிளேக்ஸ் தாயரித்தால் செலவும் அதிகமாக இருக்கும். முடிந்தால், நிலம் இருந்தால் நாமே சோளத்தை பயிரிட்டு தயாரிக்கவும் செய்யலாம்.
தொழிலுக்கு தேவையான முதலீடு
தொழிலுக்கு தேவையான பண முதலீடு என்பது நீங்கள் பெரிய அளவில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா அல்லது சிறிய அளவில் தொடங்க விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது. தற்போது இந்த தொழிலுக்கு குறைந்தபட்சம் ரூ.5 முதல் 8 லட்சம் வரை முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் முத்ரா கடன் வசதி
முத்ரா கடன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு 90 சதவீதம் வரை கடன் வசதியை அரசு வழங்குகிறது. ரூ.5,00,000-ல் தொழில் தொடங்கினால், தொடக்கத்தில் ரூ.50,000 மட்டுமே உங்கள் கையில் இருந்து வேண்டும். மீதமுள்ள பணத்தை மத்திய அரசிடமிருந்து கடனாகப் பெறலாம்.
தொழிலில் கிடைக்கும் லாபம்
ஒரு கிலோ கார்ன் ஃபிளேக்ஸ் செய்ய 30 ரூபாய் செலவாகும். சந்தையில் எளிதாக கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 கிலோ கார்ன் ஃப்ளேக்ஸ் விற்றால் உங்களுக்கு 4000 ரூபாய் லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் மாதப் புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டால், உங்கள் வருமானம் ரூ.1,20,000 வரை இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ