சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Facebook) இந்தியாவின் கொள்கைத் பிரிவு தலைவர் அங்கி தாஸ், பதவி விலகியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில், அங்கி தாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ( Mark Zuckerberg) எழுதிய ராஜினாமா கடிதத்தில், இந்தியாவில் சமூக ஊடக நிறுவனத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
‘அங்கி தாஸ் பொது சேவையில் தனது பணியை தொடர பேஸ்புக்கில் நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறந்த வகையில் பணியாற்றினார் ’என்று பேஸ்புக்கின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.
அங்கி தாஸ் தனது பணியில் நேர்மையாக செயல்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் அந்த குற்றச்சாட்டை நிராகரித்தது.
கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு, அங்கி தாஸிடம் விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, சமூக ஊடக தளத்தில் அரசியல் உள்ளடக்கம் மற்றும் தரவு பாதுகாப்பு மசோதா குறித்த பேஸ்புக்கின் நிலைப்பாடு குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள சமூக ஊடக நிறுவனத்தில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் நாட்டில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்ப்பாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம், பேஸ்புக் இந்தியாவின் தலைவர் அஜித் மோகன், சமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்துவதாக கூறப்படும் புகாரில், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR