OPS vs NPS: நாட்டில் முன்பு இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தால், அரசு ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும் என்றால், அரசுக்கு சுமை அதிகரிக்கும்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. ஆனால், இந்த அளவு பணபலன்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைப்பதில்லை, என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) திட்டத்தில், ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு முதலீடு செய்த தொகையில் 60% திரும்பப் பெறலாம் என்பதுடன், இந்த தொகைக்கு வரிவிலக்கு உண்டு. மீதமுள்ள 40% தொகையை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெற முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஓய்வு பெற்ற பிறகு, 60% மொத்த தொகையாகவும், 40% மாதாந்திர ஓய்வூதியம் பெறவும் முதலீடு செய்ய வகை செய்யும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு 2004ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், முக்கிய தகவல் வெளியீடு
நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநிலங்களில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தாவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வே ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கனவே பல மாநிலங்கள் முடிவு செய்துள்ளதோடு, புதிதாக சில மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி சில மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளன. இதுமட்டுமின்றி, சில மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு, மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பணத்தை பழைய ஓய்வூதியத்திற்காக (ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க முடியாது என்று நிதியமைச்சர் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்.
ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச மாநில அரசுகள்
ராஜஸ்தான் சமீபத்தில் தனது மாநில ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி
இதுபோன்ற திட்டங்களை கொண்டு வர, மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களில் இருந்து பணத்தை திரட்டி, வரி மூலம் சம்பாதிக்க வேண்டும். இலவச திட்டங்களுக்காக, மாநிலங்கள் தங்கள் சுமையை வேறொருவர் மீது சுமத்துகின்றன. இது தவறு." என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திவிட்டார்.
இதுபோன்ற திட்டங்களை கொண்டு வர, மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களில் இருந்து பணத்தை திரட்ட வேண்டும், வரி மூலம் சம்பாதிக்க வேண்டும். இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலங்கள், நிதிச் சுமையை வேறொருவர் மீது சுமத்த நினைப்பது தவறானது என மத்திய நிதியமைச்சர் கறாராக தெரிவித்துவிட்டார்.
மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ