புதுடெல்லி: Petrol-Diesel Prices/Fuel Credit Cards: நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை பொது மக்களின் நிலையை மோசமாக்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்தியன் ஆயில் (Indian Oil) வாடிக்கையாளர்களுக்கு 71 லட்டர் பெட்ரோல், டீசலை (Petrol-Diesel Price) இலவசமாக வழங்குகிறது.இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் அவர்களிடம் சிட்டி பாங்க் கிரெட்டிட் கார்டு இருக்க வேண்டியது அவசியம்.
ALSO READ: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை சரிவு!
இந்நிலையில் சிட்டி பேங்கில் ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டும் இல்லாமல், புதியதாகக் கார்டை விண்ணப்பித்து பெறுபவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் சிட்டி பேங்க் பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி 150 ரூபாய்க்கும் அதிகமாகப் பெட்ரோல் போடும் போது 4 டர்போ பாயிண்ட்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு 1 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் இந்த டர்போ பாயிண்ட்களை தேவைப்படும் போது ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் இந்தச் சலுகை மூலம் அதிகபட்சம் 71 லிட்டர் வாங்க கூடிய அளவிலான பணத்தை டர்போ பாயிண்ட்களாகப் பெற முடியும்.
இந்தியன் ஆயில் சிட்டி பேங்க் பிளாட்டினம் கிரெடிட் கார்டு இன் அம்சங்கள்
* இந்தியன் ஆயில் பம்புகளில் டர்போ பாயிண்டுகளை மீட்டெடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 71 லிட்டர் எரிபொருள் இலவசம் கிடைக்கும்.
* இந்தியன் ஆயில் பம்புகளில் 1 சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
* இந்தியன் ஆயில் பம்புகளில் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு 150 ரூபாயிலும் 4 டர்போ பாயிண்ட்கள் கிடைக்கும்.
டர்போ பாயிண்டுகளை பல வழிகளில் மீட்டெடுக்கலாம் ஆனால் இந்தியன் ஆயில் பம்ப்களில் ரிடீம் செய்யும்போது அதிகபட்ச பலன் கிடைக்கும்.
* இந்தியன் ஆயில் பம்புகளில் மீட்பு விகிதம் - 1 டர்போ பாயிண்ட் = Re 1
*goibibo.com, IndiGo, Make My Trip, yatra.com - 1 டர்போ பாயிண்ட் = 25 பைசா
* Book my Show, Vodafone போன்றவற்றில் மீட்பு விகிதம் - 1 டர்போ பாயிண்ட் = 30 பைசா
ALSO READ: Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR