தங்கம் வெள்ளி விலை உயர்ந்தன: US FED-ன் தாக்கம், விலைகள் இதோ!!

முந்தைய வர்த்தக அமர்வில் காணப்பட்ட கடுமையான வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திங்கள்கிழமை உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 02:55 PM IST
  • அக்டோபர் டெலிவரிக்கான MCX-ல் Gold Futures 10 கிராமுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து 51430 ரூபாயாக இருந்தது.
  • வெள்ளிக்கிழமை முடிவில், தங்கத்தின் விலை தேசிய தலைநகரில் 10 கிராமுக்கு ரூ .191 குறைந்து 52,452 ரூபாயாக குறைந்தது.
  • US FED ஒரு மோசமான நிலைப்பாட்டை எதிர்பார்க்கும் நிலையில், டாலர் வெகுவாக பலவீனமடைவதால் தங்க விலை அதிகரித்துள்ளது.
தங்கம் வெள்ளி விலை உயர்ந்தன: US FED-ன் தாக்கம், விலைகள் இதோ!!  title=

புதுடெல்லி: முந்தைய வர்த்தக அமர்வில் காணப்பட்ட கடுமையான வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Prices) திங்கள்கிழமை உயர்ந்துள்ளது.

காலை 11.45 மணியளவில், அக்டோபர் டெலிவரிக்கான MCX-ல் Gold Futures 10 கிராமுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து 51430 ரூபாயாக இருந்தது. தங்கத்தின் முந்தைய அமர்வின் விலை 51,319 ரூபாயாகவும் தொடக்க விலை 51,599 ரூபாயாகவும் இருந்தன.

டிசம்பர் மாத டெலிவரிக்கான Silver Futures, அதிகபட்சமாக 68,190 ரூபாயாக இருந்தது. இன்றைய துவக்க விலை 68,485 ரூபாயாகவும் நேற்றைய விலை ஒரு கிலோவுக்கு 67,928 ரூபாயாகவும், இருந்தன.  

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த வார இறுதியில் வரவிருக்கும் பணவியல் கொள்கைக் (Monetary Policy) கூட்டத்தில் அமெரிக்க FED (US FED) ஒரு மோசமான நிலைப்பாட்டை எதிர்பார்க்கும் நிலையில், டாலர் (Dollar) வெகுவாக பலவீனமடைந்துள்ள நிலையில், தங்க விலை அதிகரித்துள்ளது.

ALSO READ: 9.95 % வட்டி கிடைக்கும் தேசிய பென்ஷன் திட்டம் ...!!!

ஸ்பாட் தங்கம் 0525 GMT-ல் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3% உயர்ந்து 1,946.66 டாலராக இருந்தது. US Gold Futures 0.3% உயர்ந்து 1,954.60 டாலராக உள்ளது. மற்ற இடங்களில், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2% உயர்ந்து 26.80 டாலராகவும், பிளாட்டினம் 1.3% உயர்ந்து 936.74 டாலராகவும், பல்லேடியம் 0.3% சரிந்து 2,313.95 டாலராகவும் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை முடிவில், தங்கத்தின் விலை தேசிய தலைநகரில் 10 கிராமுக்கு ரூ .191 குறைந்து 52,452 ரூபாயாக குறைந்தது. முந்தைய வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமுக்கு 52,643 ரூபாய் என்ற நிலையில் முடிந்தது.

முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோ ரூ .70,431 ஆக இருந்த வெள்ளி ஒரு கிலோ ரூ .990 குறைந்து ரூ .69,441 ஆக இருந்தது.

ALSO READ: HDFC வங்கியில் பணிபுரியும் வாய்ப்பு, 14000 காலியிட இடங்கள்...!

Trending News